தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பரப்புரைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியின் சார்பில் வாக்குகளை சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை சென்றிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.
பிரதமர் மோதியின் உரையின் சில முக்கிய அம்சங்கள்:



தமிழ் கலாச்சாரத்தின் மையப்புள்ளி மதுரை மாநகர். அன்னை மீனாட்சியின் ஆட்சியில் இருக்கும் இந்த மண்,புண்ணியத்தையும்,வீரத்தையும் ஒருங்கே வைத்திருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். கூடல் அழகர் கொழுவீற்றிருக்கும் இந்த மண் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது, மாலோன் மருகன் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்து ஆட்சி செய்யும் மண் என்றென்றும் சிறப்பு வாய்ந்தது.


Also Read | TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?


உலகின் பழமையான சங்கத் தமிழ் மொழியை வளர்த்த பூமி மதுரை. காந்தியை மகாத்மாவாக மாற்றிய இந்த மண், முத்துராமலிங்கத்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்த கொடை பூமி.


மதுரை ஒன்றுபட்ட இந்தியாவின் குறியீட்டு பூமி. குஜராத்தில் இருந்து வந்த சௌராஷ்டிரத்தை சேர்ந்தவர்களும், தெலுங்கு மக்கள் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஒன்றாக வாழும் மண்.  


தமிழகத்திற்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கும் இருந்த தொடர்பு என்றென்றும் மறக்க முடியாதது.  அவருடைய "மதுரை வீரனை" மறக்க முடியுமா? அவருக்கு பாடல் பாடிய TMS பிறந்த இந்த மண்ணை மறக்க முடியுமா? 


Also Read | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்


1980ஆம் ஆண்டில்  எம்ஜிஆர் அரசை காங்கிரஸ் கலைத்த போது, எம்ஜிஆர் மதுரை மேற்கில் நின்றுதான் மீண்டும் வென்றார்.1977,1980,1984 மூன்று முறை அவரை அரியணையில் வைத்து அழகு பார்த்த மண் இது...


தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்று  மார்தட்டிச் சொல்லும் திமுகவும், காங்கிரஸ் பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரமாக இருக்கும் ஜல்லிகட்டை தடை செய்தது ஏன்? "ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான விஷயம்" என்று சொன்னவர் காங்கிரஸ் கூட்டணி தலைவர் சொன்னார். ஜல்லிகட்டு காட்டுமிராண்டி நிகழ்வா? அப்படிச் சொன்னவர்கள் தான் தமிழ் கலாசார காவலர்களா?


Also Read | தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்


அதிமுக அரசு ஜல்லிக்கட்டை  கொண்டு வர மசோதாவை கொண்டு வந்தது. அதை பாஜக அரசு ஆதரித்து சட்டமாக கொண்டு வந்து ஜல்லிகட்டு என்கிற தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்த கலசார காவலர்கள் தான் எங்கள் கூட்டணி.  


ஆனால், ஜல்லிக்கட்டை தடை செய்த திமுக காங்கிரஸ், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்த எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 


தங்கள் ஆட்சியில் மதுரையில்  AIIMS அமைப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்காத இவர்கள் இன்று அதை கொண்டுவந்த எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும். மதுரையில்  உலகத்தரம் வாய்ந்த AIIMS மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று நான் உறுதிமொழி அளிக்கிறேன்”.


Also Read | மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?