பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா. இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு ஒரு முக்கிய பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின்னர் குக் வித் கோமாளி இல் மேலும் அதிகமாக பிரபலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா (Mohan Vaidya) தன்னை பாஜகவுடன் (BJP) இணைத்து கொண்டார். தற்போது அவர் பாஜகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தலைமையில் செயல்படும் அமமுகவில் (AMMK) இணைந்துள்ளார். இதனால் வரும் தமிழக சட்டப்பேரவை (Tamil Nadu Election Assembly 2021) தேர்தலுக்காக மோகன் வைத்யா அமமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.


ALSO READ | Election 2021: "வெற்றிக் கொடி ஏந்தி" தமிழகத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்


சமீபகாலமாக பாஜகவில் இணையும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். முன்னதாக நடிகை குஷ்பு, நடிகர் ராதாரவி, கவுதமி, நமிதா, பொன்னம்பலம், ஆர்.கே.சுரேஷ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், விஜயகுமார், இயக்குநர் பேரரசு எனப் பலரும் பாஜகவில் இணைந்தனர். 



இதற்கிடையில் தற்போது பாஜகவில் செயல்பட்டு வந்த மோகன் வைத்யா திடீரென  அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்துள்ளார்.


ALSO READ | TN election 2021: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR