புதுடெல்லி: பாலிவுட் நடிகை வித்யா பாலனின் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'சகுந்தலா தேவி' வாழ்க்கை வரலாறு 2020 ஜூலை 31அம் தேதியன்று வெளியிடப்படுகிறது. இது OTT இயங்குதளம் மற்றும் அமேசான் பிரைம் வீடியோக்களிலும் (OTT platform, Amazon Prime Videos) வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணித மேதை என்று போற்றப்படும் சகுந்தலா தேவி மனித கால்குலேட்டர் என்று அழைக்கப்படுபவர். நொடிப் பொழுதில் மிகவும் சிக்கலான கணக்கையும் மன கணக்காக போடும் திறமை அவரை உலகறிந்த கணித நிபுணராக உயர்த்தியது. கணிதத்தில் அவரது திறனும் ஆளுமையும் 1982 ஆம் ஆண்டின் தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் பதிப்பில் அவருக்கு குறிப்பிடத்தக்க இடத்தைக் கொடுத்தது. 


இந்தியா கணிதத்துறையில் பல முன்னோடிகளைக் கொண்டிருந்தாலும், அதில் பெண்களின் பிரதிபிம்பமாக சர்வதேச அளவில் மிளிர்பவர் கணிதமேதை சகுந்தலா தேவி அவர்கள்.


Read Also | Cricketer ரவி சாஸ்திரியின் நிறைவேறாத காதல்


சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.  அதில் வித்யா பாலன் சகுந்தலா தேவியாக வாழ்கிறார். அவரைத் தவிர, Sanya Malhotra சகுந்தலா தேவியின் மகள் வேடத்தில் நடித்திருக்கிறார். உண்மையில் சகுந்தலா தேவிக்கும் அவரது மகளுக்குமான  சிக்கலான ஆனால் அற்புதமான உறவை சான்யா மல்ஹோத்ரா அனுபவித்து நடித்திருக்கிறார்.


இந்தத் திரைப்படத்தில் Jisshu Sengupta (ஜிசு செங்குப்தா) மற்றும் Amit Sadh அமித் சாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனு மேனன் மற்றும் Nayanika Mahtani இணைந்து உருவாக்கியுள்ள திரைக்கதைக்கு வசனங்களை எழுதியுள்ளார் Ishita Moitra (இஷிதா மொய்த்ரா).


கணித மேதை சகுந்தலா தேவி கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தையுடன் மூன்று வயதில் பொழுதுபோக்காக சீட்டு விளையாடும்போது குழந்தை சகுந்தலாவின் கணிதத் திறமை வெளிச்சத்திற்கு வந்தது.


Read Also | 13 வயதில் 41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட பிரபலத்தின் Love Story


மகளின் திறமையை உலகின் முன் கொண்டு வருவதற்கு முழு மூச்சுடன் முயற்சித்தார். தனது ஆறாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது கணித ஆற்றலை வெளிப்படுத்திய சகுந்தலாவின் கணிதப் பயணம் வெற்றிப் பயணமானது.


1971ம் ஆண்டில் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கமூலத்தை மனக்கணக்கில் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 1980ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில் தலா 13 இலக்கம் கொண்ட எண்களை வெறும் 28 நொடியில் பெருக்கி விடையளித்து அனைவரையும் திகைக்கச் செய்தார் சகுந்தலா. 


பிறகு, எண் விளையாட்டு, எண் ஜோதிடம், திகைக்க வைக்கும் கணிதம் உள்ளிட்ட பல்வேறு கணித நூல்களை எழுதிய இந்த மனிதக் கணினி, 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.