வழுக்கை விழுவதை தவிர்க்க வேண்டுமா? ‘இதை’ செய்து பாருங்கள்!
Hair Fall Tips Tami: உலகம் முழுவதும் பலர் சந்தித்து வரும் பிரச்சனை, முடி தாெடர்பான பிரச்சனைதான். இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஈசி டிப்ஸ், இதோ.
நமது தோற்றத்தை, நன்றாக மாற்றுவதற்கும் நன்றாக இல்லாததாக மாற்றுவதற்கும் நாம் செய்து கொள்ளும் சிகை அலங்காரம் குறித்து அமையும். நாம் தலை வாறும் போது, சீப்பில் வரும் கொத்து கொத்தான முடியை பார்த்தால் மனதே நொறுங்கிவிடும். பொதுவாக, 50 வயதிற்கு மேலாகத்தான் பெரும்பாலானவர்களுக்கு வழுக்கை விழும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மிக இளம் வயதில் இருப்பவர்களுக்கும் முடி அதிகமாக கொட்டி, வழுக்கை விழுந்து வருகிறது.
இளம் வயதில் விழும் வழுக்கையையும், வழுக்கை விழாமல் தடுக்கவும் சில டிப்ஸ்கள், இதோ.
இளமையில் வழுக்கை விழுதற்கான அறிகுறிகள்:
முடி உதிர்வு, எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். இது, பாலினம்,வயது, உணவு முறை குறித்து மாறுபடும். சில சமயம், உச்சந்தலையில் இருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலில் இருந்தும் கூட முடி கொட்டலாம். ஆண்களை பொறுத்தவரை, வழுக்கை விழுவதற்கு முன்னர் அவர்களின் தலையில் சிவப்பு நிற கோடுகள் தோன்றலாம். பெண்களுக்கு ஆங்காங்கே முடி கொட்டி வழுக்கை விழும். இது, தலை வாரிய பிறகு அப்பட்டமாக தலையில் தெரியும்.
இளம் வயதில் வழுக்கை விழுவதற்கான காரணம்:
மரபணு தொடர்பான காரணங்கள், வழுக்கை விழுவதற்கு காரணமாக இருக்கலாம். நிறைய நேரங்களில் குழந்தைகளுக்கு அவர்களின் பரம்பரை ஜீன்களில் இது இருக்கலாம். சரியாக முடியை பராமரிக்காமல் சரியான ஷேம்பூ அல்லது எண்ணெய் உபயோகிக்காததால் அதிக முடி கொட்டலாம்.
வைட்டமின் குறைபாடு..
முடி உதிர்தலுக்கு மற்றொரு முக்கிய காரணம் வைட்டமின் குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த குறைபாட்டை நீங்கள் சரிசெய்தால், உங்கள் முடி உதிர்வு பிரச்சனை சரியாகிவிடும்.
ஆனால் வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் முடி உதிர்வை சுமாக கண்டறிய முடியாது. மேலும் உங்களுக்கான மருத்துவரை அணுகி வைட்டமின் குறைபாடு பரிசோதனையை மேற்கொள்ளவதும் நல்லது. அவரே அதற்கான உரிய சிகிச்சைகளையும் கூறுவார்.
மேலும் படிக்க | மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை... திராட்சையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்...!
இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
>முதலில் மருத்துவரை அணுகுங்கள்: அதிக ஆண்டுகளாக முடி உதிர்வால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள், இதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்வர்.
>சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாக்ம். தண்ணீர் அதிகம் குடித்து நீர்ச்சத்தினையும் சரியாக வைத்திருத்தல் நன்று. ஒமேகா 3 உணவுகள், முடி வளர்ச்சிக்கு உதவும். முட்டை, கீரை வகை உணவுகள், நட்ஸ் வகை உணவுகள் ஆகியவை நல்ல ஊட்டச்சத்தினை உடலுக்கும் முடிக்கும் அளிக்கும்.
>வைட்டமின் சத்துக்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லதாகும். வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி7, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
>எண்ணெய் மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கும், முடி அடர்த்தியாவதற்கும் உதவும். லாவண்டர் எண்ணெய், தேங்காய் எண்ணெய், காஸ்டர் எண்ணெய் உள்ளிட்டவற்றை இந்த எண்ணெய் மசாஜிற்காக உபயோகித்து கொள்ளலாம்.
>மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு ஒரு பெரிய காரணமாக அமையும். யோகாசங்கள், உடற்பயிற்சிகள், நீச்சல் பயிற்சி உள்ளிட்டவை மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகள் ஆகும். எனவே, மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும் தேர்ந்தெடுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ