பழங்கள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மட்டுமின்றி, பலவிதமான நோய்கள் அண்டாமல் இருக்கவும் பழங்கள் மிக அவசியம். அந்த வகையில் திராட்சையின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
திராட்சை பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம். கருப்பு திராட்சை, பச்சை நிற திராட்சை பல்வேறு வகையான திராட்சைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன.
ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் திராட்சை, அல்சைமர், பார்க்கின்சன் நோய், புற்றுநோய் இதய நோய் என பலவித கொடிய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது. தினமும் திராட்சை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடல் பருமனை குறைக்க திராட்சை பெரிதும் உதவியாக இருக்கும். பசியைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட திராட்சையில் நீர்ச்சத்து நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
ஊட்டசத்துக்கள் நிறைந்த பழமான திராட்சையில் கிளைசனிக் இண்டெக்ஸ் அளவு மிகக் குறைவு என்பதால் நீரழிவு நோயாளிகள் இதை பயமின்றி உண்ணலாம். மேலும் திராட்சையில் காணப்படும் தனிமங்கள் ரத்த சர்க்கரையை அதிகரிப்பதில்லை.
திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன. புற்றுநோய் வந்தவர்கள் கூட தினமும் திராட்சை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் பரவலை பெரிதும் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகுக்கும் திராட்சை உதவுகிறது. தினமும் திராட்சை சாப்பிடுபவர்கள் பளபளப்பான சருமத்தையும் நீண்ட கூந்தலையும் பெறுவார்கள். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் முதுமையையும் தடுக்கிறது
தினமும் திராட்சை சாப்பிடுவதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் தீரும். எனவே மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற நார்ச்சத்து நிறைந்த திராட்சை உதவும்.
திராட்சையில் பொட்டாசியம், மாங்கனிசு, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுவடையும். இதனால் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோ புரொசிஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.