Keerthy Suresh Weight Loss Tips : தமிழ் திரையுலகில் இருக்கும் கதாநாயகிகள் பலர், படத்திற்காகவோ அல்லது தங்களது தனிப்பட்ட விருப்பமாகவோ உடல் எடையை குறைப்பர். அந்த வகையில் தனது வெயிட் லாஸ் பயணத்தால் அனைவரையும் ஈர்த்த நடிகை, கீர்த்தி சுரேஷ். திரைக்கு வந்த புதிதில் கொஞ்சம் கொழுக் மொழுக் நாயகியாக இருந்த இவர், சில நாட்களுக்கு முன்பு உடல் எடை குறைந்து மெல்லிய தேகமாக மாறினார். இதையடுத்து, இவர் உடல் எடை குறைந்தது எப்படி என்பதற்கான சீக்ரெட்ஸ்களையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அது குறித்து, இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெல்தியான டயட்: 


உடல் எடையை குறைப்பதற்கு ஹெல்தியான டயட் அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதையேதான் கீர்த்தியும் உடல் எடையை குறைக்க பின் தொடர்ந்து இருக்கிறார். இவர், வீட்டில் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு, சுமார் 15 கிலோவிற்கும் மேல் குறைத்ததாக கூறப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது மட்டுமின்றி, இவர் தான் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்பதையும் கணக்கெடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தினமும் எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்கிறோம் என்பதையும், கலோரிகள் எவ்வளவு குறைத்து இருக்கிறோம் என்பதையும் கணக்கிட இது  உதவும். 


மேலும் படிக்க | வேகமா எடை குறைய.. காலையா? மாலையா? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது


 


 


வொர்க் அவுட்: 


உடல் எடையை குறைக்க டயட் மிகவும் அவசியம் என்றாலும், அதனுடன் சேர்த்து சில உடற்பயிற்சிகளையும் செய்வது மிக முக்கியமாகும். கீர்த்தி, தினமும் தன் எக்ஸ்ட்ரா தசைகளை குறைக்க வொர்க் அவுட் செய்து வந்தார். அவருக்கு உடல் எடையை குறைக்க உதவிய பயிற்சிகளுள் கார்டியோ இந்த பயிற்சிகள் முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றன. கீர்த்தி தன் எடையை குறைக்க தினமும் 30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார். இந்த 30 நிமிடங்களில் 20 நிமிடங்களை அவர் ஜாகிங் பயிற்சிக்காக ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல 10 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட பயிற்சியும் செய்து இருக்கிறார். இது அவரது உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெகுவாக உதவி இருக்கிறது. 


வெயிட் டிரெய்னிங்: 


உடல் எடையை குறைக்க, வீட்டு உடற்பயிற்சிகள் ஒரு வகையில் உதவினாலும், வெயிட் டிரெய்னிங் பேருதவியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பயிற்சியை செய்வதால், இருதய நோய் பாதிப்புகள் இருந்து தப்பிப்பதோடு, எடையையும் குறைக்கலாம். கீழ் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அளவுக்கு அதிகமான தசைகளை குறைப்பதற்கும், கை மற்றும் தொடை தசைகளை குறைப்பதற்கும் வெய்ட் ட்ரைனிங் உதவும். டேய் இதையே கீர்த்தியும் சில மாதங்கள் செய்திருக்கிறார். 


யோகாசனம்: 


கீர்த்தி சுரேஷ்க்கு, உடல் எடையை குறைக்க மேலும் உதவிய இன்னொரு விஷயம், யோகாசனம். தினமும் காலையில் எதை செய்ய தவறுகிறாரோ இல்லையோ யோகா செய்ய மட்டும் அவர் தவறியதே இல்லை என்று கூறப்படுகிறது. கோமுகாசனம், பாலாசானம், தனுராசனம் உள்ளிட்டவை அவரது ஃபேவரட் ஆசனங்களில் சில என கூறப்படுகிறது. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடை குறையும்..இரவு உணவு சாப்பிட்ட பின்பு இந்த ஸ்நாக்ஸை சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ