இந்த நவீன உலகில், பலர் தங்களுடைய எடை வேகமாக குறைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் எடையை குறைப்பதற்கான டயட் மற்றும் வர்க்-அவுட்களையும் செய்யவும் தயாராய் இருக்கின்றனர்.  என்னதான் இது டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டாலும், பலர் இயற்கையான, ஹெல்தியான வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். துரித உணவுகளை குறைத்துக்கொள்வது, வெளி உணவுகள் அன்றி வீட்டு உணவுகளை அதிகம் விரும்புவது, தினசரி வர்க்-அவுட் செய்வது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளை பல இளைஞர்கள் தற்போது பின்தொடர ஆரம்பித்து விட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முதலில் ஆரோக்கியாமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் நலனும் மேம்படுவது மட்டுமன்றி, நோய் பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கலாம். 


உடல் எடையை குறைக்க உதவும் மாவு..


எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், பெரும்பாலும் சப்பாத்தியை தங்கலது டயட்டில் சேர்த்துக்கொள்பவர்களாக இருப்பர். இதை செய்ய, கோதுமை மாவு தேவைப்படும். இந்த மாவைத்தவிர அவர்களின் டயட் சார்டில் வேறு மாவு பொருளே இருக்காது. ஆனால், இதனை தவிர வேறு சில ஆரோக்கியமான மாவுகளும் டயட் உணவு பட்டியலில் அடங்கும். அவை என்னென்ன தெரியுமா? 


எடையை குறைக்க உதவும் மாவுகளின் பட்டியல்:


குயினோ:


உடல் எடையை இழக்க விரும்பும் பலரும் அவர்களின் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவு, குயினோ. இதை பலர் உப்புமாவாக செய்து சாப்பிடுவர். இதில், ஊட்டச்சத்துகள் எக்கச்சக்கமாக அடங்கியுள்ளது. அதனால், உடலுக்கு ஆற்றலும் அளிக்கிறது. குயினோவை அரைத்து அதனை மாவாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும் கருப்பு குயினோ, வெள்ளை குயினோ என பல வகைகள் இருக்கிறது. 


தேங்காய் மாவு:


உலர்ந்த தேங்காய்களை அரைத்து அதை நேரடியாக பயன்படுத்துவதே தேங்காய் மாவாகும். இந்த மாவ்ல் பசையம் இருக்காது. இதனால், இது க்ளூட்டன் ஃப்ரீ உணவாக கருதப்படுகிறது. இந்த மாவில் பொட்டாசிய சத்துகள் நிறைந்துள்ளதுடன் மட்டுமன்றி, உடலில் தங்கியிருக்கும் கொழுப்பையும் அகற்றுகிறது. வளர்ச்சிதை மாற்றம் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றிற்கும் இந்த மாவை பயன்படுத்திக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | Brain health: உங்கள் சுட்டிக் குழந்தை... எல்லாவற்றிலும் வல்லவனாக இருக்க..!!


ராஜ்கிரா மாவு:


இந்த மாவினை அமராந்த் மாவு என்றும் அழைப்பர். இதில், பசையம் அற்ற புரதச்சத்து நிறைந்துள்ளது. அமராந்த் எனும் செடியின் விதையில் இருந்து அரைத்து எடுத்த மாவு இது. கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதம் உள்பட பல நுண் சத்துகள், இந்த ராஜ்கிரா மாவில் அடங்கியுள்ளது. இந்த மாவினை டயட்டில் சேர்த்துக்கொள்வது மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம். 


பாதாம் மாவு:


பாதாமில் புரதம்,ஃபைபர், நல்ல கொழுப்பு, வைட்டமின் ஈ சத்துகள், மாக்னீசிய சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு கைப்பிடி பாதாமில் 164 கலோரிகளும், 6 கிராம் கார்போஹைட்ரேட்ஸ்களும், 3.5 கிராம் ஃபைபர் சத்துகளும் நிறைந்துள்ளது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாதாமை நன்கு தூளாக அரைத்து மாவாக உபயோகிக்கலாம். எடை இழப்பிற்காக எடுத்துக்கொள்ளும் டயட் உணவுகளில் இதையும் சேர்த்துக்கொள்வது, நல்லது. 


முழு கோதுமை மாவு:


கோதுமை மாவில், பிற மாவுகள் போல அன்றி அதிக கொழுப்பு சத்துகள் இருக்காது. இதில் இருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து அமைபுகள், கொஞ்சம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்துவிடும். அதனாலேயே எடை இழப்பு பயணத்தில் இருக்கும் பலர், இதனை தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்கின்றனர். 


மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா? பதில் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ