காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா? பதில் இதோ!

பலருக்கு காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் உடலில் பல்வேறு நன்மைகளும் ஏற்படுகிறது. எவ்வளளவு தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது? இதோ டிப்ஸ்!  

Written by - Yuvashree | Last Updated : Feb 21, 2024, 05:26 PM IST
  • காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா?
  • இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
  • காலையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா? பதில் இதோ! title=

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.  உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்து கொள்வதற்கும், ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாத்து கொள்வதற்கும் தண்ணீர் பயன்படும். சிலர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதற்கு பின்னால் என்ன மருத்துவ நன்மைகள் இருக்கிறது என தெரியாமலேயே தண்ணீர் அருந்துவர். அவர்களுக்காகவே இந்த பதிவு.

காலையில் எழுந்ததும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

காலையில் எழுந்தவுடன் சராசரியாக ஒருவர், 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர், மருத்துவர்கள். இது, கிட்டத்தட்ட 3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும். இன்னும் சொல்லப்போனால், பல் துலக்குவதற்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள். 3 கிளாஸ் தண்ணீர் அருந்த ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக இந்த அளவை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டுமாம். காலையில் எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடித்தால் உடலில் மெட்டபாலிச சத்துகள் அதிகரித்து, அஜீரண கோளாறுகள் சரியாகும் என்கின்றனர், மருத்துவர்கள். 

வெதுவெதுப்பான நீரை காலையில் அருந்துவதால், அதில் உள்ள வெப்பத்தன்மை செரிமான மண்டலத்தை தூண்டி, அன்றைய நாளுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உணவுகளை செரிமானம் செய்வதோடு மட்டுமன்றி, புரத சத்துக்களை சரியாக உறிஞ்சும் பன்பையும் தண்ணீர் அளிக்கிறது. 

காலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்ததும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஸ்னாக்ஸ் அல்லது காலை உணவை எடுத்துக்கொள்ள கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். 

மேலும் படிக்க | புற்று நோய் முதல் கொல்ஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் மாதுளை!

நன்மைகள் என்ன? 

மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கும்:

நாம், சரியாக 8 மணி நேரம் வரை தூங்குகிறோம். 8 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பது, உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். இதனால், செரிமான சக்திகள் அதிகரிக்கும். உடலில் ஆற்றல் சக்தி அதிகரித்து அன்றைய நாள் முழுவதும் உடலை ஆக்டிவாக வைத்திருக்க உதவும். 

மன நலனுக்கு நல்லது:

இரவில் தூங்கும் போது, மூச்சு விடுவது, வியர்வை விடுவது ஆகியவை மன நிலை சம்பந்தப்பட்ட ஆற்றல்களாக இருக்கும். இதனால் காலை எழுந்து கொள்ளும் போது சிலருக்கு சோர்வான உணர்வு ஏற்படும். அதனால், எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது, மன நலனுக்கு நன்மை பயக்கும் என மருத்துவ அறிக்கைகள் சில தெரிவிக்கின்றன. 

மூளை செயல்பாட்டினை அதிகரிக்கும்..

காலையில் முதலில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது மனத் தெளிவு, கவனம் மற்றும் செறிவு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது. அறிவாற்றலுக்கும் செயல்திறனுக்கும் உடலை நீர் சத்து மிக்கதாக வைத்திருப்பது முக்கியம். போதுமான தண்ணீர் குடிப்பது மூளைக்கு செல்லும் நரம்பியல் செயல்பாடுகளையும்  ஊக்குவிக்கிறது. இது, நாள் முழுவதும் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.

நச்சுகளை நீக்கும்:

முந்தைய நாள் சாப்பிடும் உணவு பொருட்களின் கழிவுகள், உடலில் இரவு முழுவதும் தங்கிவிடுகிறது. இந்த நச்சுகளை, காலையில் தண்ணீர் குடிப்பது மூலம் அகற்ற முடியும். தண்ணீர், இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இதனால், சிறுநீரக செயல்பாடும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | செவ்வாழைப் பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் டிப்ரஷனே வராது...! - கோடையில் இது அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News