டெங்கு காய்ச்சலா? விரைவில் குணமாக இந்த உணவுகளை டயட்டில் சேருங்கள்
Dengue Diet Tips: மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.
Dengue Diet Tips: நாடு முழுதும் பருவமழை தொடங்கிவிட்டது. மழைக்காலம் மக்களுக்கு நிவாரணம் அளித்தாலும், இந்த காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நம்மை ஆட்கொள்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு வேகமாக பல இடங்களில் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பலியாகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
டெங்கு தொற்று ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான மக்களை பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு டெங்கு காய்ச்சலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், டெங்குவை திறம்பட தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி டெங்குவின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. டெங்குவை எதிர்த்துப் போராட, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் முக்கியம். உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், டெங்கு காய்ச்சலின் அபாயத்தை அகற்றவும் உதவும் சில ஆரோக்கியமான உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொற்றுநோய்கள்
இந்த பருவகாலத்தில் தொற்றுநோய்களுக்கான ஆபத்து கணிசமாக அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக பல வித வைரஸ்களும் உடலை வேகமாகவும் எளிதாகவும் தாக்குகின்றன. ஆகையால், குறிப்பாக மழைக்காலத்தில் உடலை மிக பத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது மிக அவசியமாகும்.
ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து வேகமாக குணம் பெற, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். டெங்குவிலிருந்து விரைவாக குணமடைய உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
- டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்கவும், காய்ச்சல் ஏற்பட்டால் விரைவாக குணமடையவும், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் கற்றாழை: இப்படி தினமும் சாப்பிடுங்க
- டெங்கு காய்ச்சல் இருந்தால், கிவி பழம் சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
- டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், இரத்த ப்ளேட்லெட் எண்ணிக்கை (Blood Platelet Count) குறையும். இதை அதிகரிக்க பப்பாளியை தினமும் சாப்பிட வேண்டும். பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
- பசலைக் கீரையில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆகையால் டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
- இது தவிர, நாவல் பழம், மாதுளை ஆகிய பழங்களும் டெங்கு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பழங்களாகும்.
- பூண்டில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகள் உள்ளன. ஆகையால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டை உட்கொண்டால் டெங்கு நோய்த்தொற்றை எளிதாக குணப்படுத்தலாம்.
- மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். போதுமான அளவு நீர் அருந்தி நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், நோயாளிக்கு சுத்தமான மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
- டெங்கு காய்சல் உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். இது டெங்குவால் ஏற்படும் தாதுப் பற்றாக்குறையை சரி செய்ய உதவும்.
- புதிதாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளையும் உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பாடாய் படுத்தும் தலைவலி: இந்த நிலையை தாண்டினால் மருத்துவரை அணுகுவது அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ