தண்ணீர் குறைவாக குடிக்கும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை, இவை உங்களை தாக்கலாம்!!
Water Intake in Summer: குறைவாக தண்ணீர் குடிப்பது நம் உடலில் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Drinking Water In Summer: நம் உடல் 70% தண்ணீரால் ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நீரின் அளவை பராமரிக்க, நாம் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 1 நாளில் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குறைவாகக் குடித்தால், அது நமது உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்கும். குறைவாக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜீரண கோளாறு
நாள் முழுவதும் தண்ணீர் குறைவாக குடித்தால், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படக்கூடும். ஏனென்றால் தண்ணீர் நம் உணவை ஜீரணிக்கச் செய்கிறது. நாம் குறைவாக தண்ணீர் குடித்தால், உணவை ஜீரணிக்க நேரம் எடுக்கும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சிறுநீர் தொற்று
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் தொற்று ஏற்படலாம். ஏனெனில் தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும். ஆனால் குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீர் அதிகம் வெளியேறாது, இதனால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும்.
மேலும் படிக்க | High Cholesterol இருந்தால் அலர்ட்!! இந்த பிரச்சனைகள் உங்களை ஆட்கொள்ளும்
சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்கள்
தண்ணீர் நமது உடலில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. மேலும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் இது சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
சரும பிரச்சனைகள்
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் மிகப்பெரிய விளைவு தோலில் காணப்படுகிறது. தண்ணீர் குறைவாக குடிப்பதால் தோல் வறண்டு, உயிரற்று வாடுகிறது. சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடித்தால், சருமம் பளபளப்பாகவும், சுருக்கங்களும், வயதான அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.
ஆற்றல் குறைவு
போதிய அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு ஆற்றல் குறைவாக இருப்பதாகவும், அவர்களின் மூளை சரியாக செயல்படாது என்றும் நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் மனநிலையை கெடுத்துவிடும். இது தலைவலி பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடுத்தால் கிடைக்கும் நன்மைகள்:
தண்ணீர் குடிப்பதில் குறைபாடு இருந்தால், உடலின் முழு சமநிலையும் பாதிக்கப்படுகின்றது. காலையில் எழுந்தவுடன் அதிக தண்ணீர் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காப்பி குடிப்பார்கள். இருப்பினும், தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன், அவர்கள் குறைந்தது ஒரு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
எடை குறைக்க உதவுகிறது
நீங்கள் எடை இழக்க விரும்பினால், அதிக கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது அவசியம். காலை உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது கலோரி அளவைக் குறைக்கிறது. காலையில் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
நச்சுத்தன்மை நீங்கும்
காலையில் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். சிறுநீரகம் அழுக்குகளை வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.
தோலுக்கு நல்லது
தண்ணீர் குடிப்பதால் சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. உங்கள் தோலில் 30 சதவீதம் உள்ள தண்ணீர் சருமத்துக்கு பிரகாசத்தை அதிகரிக்கிறது.
வெதுவெதுப்பான நீர் அஜீரணத்திற்கு நல்லது, வளர்சிதை மாற்றம் வலிமையானது
அதிகாலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சில உணவுகள் வயிற்றில் செரிக்கப்படாமல் இருந்தால், அதை சரியாக்கி தண்ணீர் செரிமானத்திற்கு உதவுகிறது. இது தவிர, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் பலப்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிகரிக்கும் ’சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ ..! இதுதான் அறிகுறிகள்..!