மாரடைப்புக்கு காரணம்
மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் எங்கோ ஓரிடத்தில் இப்படி ஏற்படும் உயிரிழப்புகள் இப்போது நாள் ஒன்றுக்குக்கு கேள்விப்படும் அளவுக்கு அதகிமாகிவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் அடிகோடிட்டு காட்டப்பட்டாலும், மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாகும். மாரடைப்பு வரக்கூடாது என்றால் உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
சைலண்ட் ஹார்ட் அட்டாக்
இது ஒருபுறம் இருக்க எந்தவித இதய நோய் பிரச்சனைகள் இல்லாதவர்கள்கூட சைலண்ட் மாரடைப்பால் உயிரிழப்பது லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருப்பதும், அதனை அசால்டாக எடுத்துக் கொள்வதும் உயிரிழப்புக்கு வழிகோலுகின்றன. வெளிப்படையாக கூறுவது என்றால் சைலண்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு எந்தவித அறிகுறியும் இருக்காது.
ஆய்வு சொல்வது என்ன?
அமெரிக்க மருத்துவ சங்க இதழ் மற்றும் ஹார்வர்ட் ஹெல்த் ஆய்வுகளின் படி 45 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த வித இருதய நோயும் இல்லாமல் மாரடைப்பால் இறந்தது தெரியவந்திருக்கிறது. குறிப்பிடத்தகுந்த விஷயம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே தெரியாது. அதாவது சைலண்ட் ஹார்ட் அட்டாக்கில் 10 ஆண்டுகளுக்குள் பல்வேறு தருணங்களில் இறந்திருக்கின்றனர் என கூறுகிறது. அதேநேரத்தில் அவர்களிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்திருக்கிறது.
சைலண்ட் ஹார்ட் அட்டாக் காரணிகள்
இதற்கான காரணங்களை ஆராயும்போது பொதுவாக கூறப்படும் காரணங்களே சைலண்ட் ஹார்ட் அட்டாக்குக்கும் சுட்டிக்காட்டப்படுகிறது. நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பது, அதிக கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன.
அறிகுறிகள் என்ன?
மார்பு வலி, மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், பலவீனம், மயக்கம், தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கும் பக்கவாதம் வருமா? அறிகுறிகள் இதுதான்
மாரடைப்பை தடுப்பது எப்படி?
வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம். குறைவான உடல் உழைப்பு, சீரற்ற தூக்கம், புகையிலை பிடித்தல், மது அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதல், அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ