மது அதிகமாக அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என்று பலரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.  ஆனால் தற்போது ஒரு ஆய்வின்படி மதுவினால் வயதானவர்களை விட அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது இளம் வயதினர் என்று கூறப்படுகிறது.  ஆல்கஹாலால் ஏற்படும் பாதிப்பு, வயது, பாலினம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இந்த ஆய்வு கூறுகிறது.  இந்த ஆய்வில் வயது மற்றும் இருப்பிடத்தை வைத்து 15 முதல் 39 வயதிற்குட்பட்ட நபர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டனர்.  அதேசமயம் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது சில உடல்நலன்களை அளிப்பதாக கூறப்படுகிறது.  மிதமான அளவு அவர்கள் மது அருந்துவது இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற அபாயங்களை குறைப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும் 


ஆனால் இந்த 15 முதல் 39 வயதிற்குட்பட்ட மது பிரியர்கள் பல்வேறு விதமான உடல் உபாதைகளை சந்திக்கின்றனர், இவர்களுக்கு மது அருந்துவதால் எவ்வித நல்லதும் கிடைக்கப்பெறுவதில்லை.  கடந்த 2020ன் கணக்கெடுப்பின்படி, 204 நாடுகளில் சுமார் 1.34 பில்லியன் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.  வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலை போன்றவை மது அருந்துவதாலேயே பெரும்பாலும் நடப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.  ஒரு நபர் எந்தளவு மது அருந்தினால் இந்த அபாயத்திலிருந்து ஓரளவு தற்காத்து கொள்ள முடியுமென்றால், 15-39 வயதிற்குட்டபட்ட ஆண்கள் ஒரு நாளைக்கு 0.136 ஸ்டாண்டர்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம், இது பத்தில் ஒரு பங்காகும்.  இதுவே 15-39 வயதிற்குடப்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கான மதுவின் அளவு 0.273 ஆகும்.



ஒன் ஸ்டாண்டர்ட் ட்ரிங்கில் 10கிராம் அளவு சுத்தமான ஆல்கஹால் உள்ளது, உதாரணமாக இது 100மி.லி ரெட் ஒயினிற்கு சமமாகும்.  அதுவே 40-45 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஒரு நாளைக்கான மது அருந்தும் அளவானது 0.527 ஆகும், இந்த வயதுடைய பெண் மது பிரியர்களுக்கு ஒரு நாளைக்கான மது அருந்தும் அளவு 0.562 ஆகும்.  65 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 3.19 அளவும், பெண்கள் 3.5 அளவும் மது அருந்திய பொழுதுதான் அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு இருக்கிறது.  அதனால் வயதானவர்கள் அவர்களுக்கான மிதமான அளவில் மது அருந்தினால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ