இரவில் தூக்கம் வரவில்லையா? மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!
இன்றைய வேகமான உலகில் தூக்கமின்மை என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்கும் தூக்கமின்மை பிரச்சனை என்பது இரவில் தூங்குவதில் சிக்கல் இருப்பதைக் குறிக்கிறது. இதனை பலரும் பெரிய விஷயமல்ல கருதுவதில்லை. ஆனால் உண்மையில் இது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். போதிய தூக்கம் இல்லாததால் உங்கள் இதயம் பாதிக்கப்படலாம் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயங்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னேர்ச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். இரவில் சரியான தூக்கம் இல்லாத போது, அது கவலை அல்லது சோகத்தை அதிகரிக்க செய்யலாம்.
போதுமான அளவு தூக்கம் வரவில்லை என்றால், இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கலாம். ஏனென்றால், சரியான தூக்கமில்லாத நபர்களின் உடல்கள் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இது அவர்களின் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது காலப்போக்கில் அதிகரித்து இரத்த நாளங்களை குறுகலாக மற்றும் கடினமாக்குவது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். போதுமான அளவு தூங்காதது நம் உடல்களில் வீக்கத்தை உண்டாக்குகிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் இதயத்தை மிகவும் கடினமாக உழைக்கச் செய்வது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் நன்றாக தூங்காத நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு நன்றாக தூங்குபவர்களை விட 45% அதிகம். வயதானவர்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது.
சரியான தூக்கத்தை பெறுவது எப்படி?
தினசரி சரியான தூக்கத்தை பெற வார இறுதி நாட்களிலும் ஒரே மாதிரியான தூக்க வழக்கத்தை கடைபிடியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், எழுந்திரிப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
இரவில் காபி அல்லது எனர்ஜி பானங்கள் போன்றவற்றைக் குடிக்காமல் இருக்கவும், மேலும் தூங்கும் முன் சிகரெட்டைத் தவிர்க்கவும். இதனை நீங்கள் இரவு செய்தால் தூக்கத்தை கெடுக்கும்.
உங்கள் படுக்கையறையை நல்ல இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள். மேலும் அதிகம் சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இது உங்கள் தூக்கத்தை அதிகப்படுத்தும்.
இரவில் யோகா, அமைதியாக உட்கார்ந்து யோசிப்பது அல்லது உங்கள் தசைகளை ஒவ்வொன்றாக ரிலாக்ஸ் செய்வது போன்ற விஷயங்களைச் செய்வது உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும்.
உங்களுக்கு எப்போதும் தூங்குவதில் சிக்கல் இருந்தால், மருத்துவர் அல்லது தூக்க நிபுணரை சந்திப்பது நல்லது. இது உங்கள் தூக்க பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய உங்களுக்கு உதவும்.
போதுமான தூக்கம் கிடைக்காதது உண்மையில் நம் இதயங்களை பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். சரியாக தூங்காதது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இரவில் நன்றாக தூங்கவும், அதே நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
லும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ