கொண்டைக்கடலையின் வியக்க வைக்கும் நன்மைகள்: தெரிஞ்சா விடவே மாட்டீங்க
கொண்டைக்கடலை சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு இது சத்தானது. இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கொண்டைக்கடலையின் ஊட்டச்சத்து நன்மைகள்: கொண்டைக்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கடலை வகையாகும். இது பல விதங்களில் சமைத்து உண்ணப்படுகின்றது.
இதை சாப்பிடுவதற்கு எவ்வளவு சுவையாக இருக்கிறதோ, அதே அளவு இது சத்தானது. இதில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள புரதங்கள் தசைகளை உருவாக்கவும், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதே நேரத்தில், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. கொண்டைக்கடலையில் மறைந்திருக்கும் மற்ற நல்ல குணங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1- கொண்டைக்கடலையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல், அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற குடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
2- கொண்டைக்கடலை இரும்பின் சிறந்த மூலமாகும். இதனை உட்கொள்வதால் இரத்த சோகை பிரச்சனை இருக்காது.
3- உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க கொண்டைக்கடலை உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயம் குறைகிறது.
4- கொண்டைக்கடலை உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகின்றது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது.
மேலும் படிக்க | இந்த எளிய பழக்கங்களின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்!
5- கொண்டைக்கடலை பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதை உட்கொண்டு நீண்ட நேரம் ஆன பிறகும் ஆற்றல் அளவு அதிகமாக இருக்கும்.
6- கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
7- கொண்டைக்கடலையில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது முடி உதிர்தல் பிரச்சனையிலும் உதவுகிறது. அதே போல் கொண்டைக்கடலையில் வைட்டமின்கள்-ஏ, பி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இது உச்சந்தலையையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
8- கொண்டைக்கடலையில் ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் எதிர்மறை அறிகுறிகளை இயற்கையாகவே குறைக்க உதவுகிறது.
9- கொண்டைக்கடலையில் பீடா கரோட்டின் எனப்படும் ஒரு தனிமம் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு நன்மை பயக்கும்.
10- கொண்டைக்கடலையை உட்கொள்வது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பல நோய்களுடன், வானிலை மாற்றத்தால் வரும் பல உடல் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
11- கொண்டைக்கடலை டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் பிரச்சனையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
12- தாமிரம் மற்றும் மாங்கனீசு கொண்டைக்கடலையில் காணப்படுகின்றன. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதனை உண்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR