மஞ்சள் தண்ணீரின் மகத்தான நன்மைகள்: இன்றே பருக துவங்குங்கள்
Health News: பாலில் மஞ்சள் சேர்ப்பது மட்டுமல்ல, தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கு தெரியாது.
மஞ்சள் நம் சமையலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பொதுவாக பாலில் மஞ்சள் பொடியை சேர்த்து குடிப்பது நமது பழக்கமாக உள்ளது. இப்படி செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்ப்பதோடு, உடலில் சேர்ந்துள்ள சளி, கபம் ஆகியவையும் குணமாகும். பாலில் மஞ்சள் சேர்ப்பது மட்டுமல்ல, தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கு தெரியாது.
இதுவரை மஞ்சள் தண்ணீர் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள், இனி அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதில் உள்ள பல வித அற்புதமான நன்மைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மஞ்சள் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும்.
மஞ்சள் தண்ணீர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்
மஞ்சள் பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலின் தீவிரமான பல பிரச்சனைகளை அகற்றுவதில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சருமத்தின் அழகை இது மேம்படுத்துகிறது. மஞ்சள் தண்ணீர் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தி-யை வலுப்படுத்தும். பல்வேறு நோய்களை எதிர்த்து போராடத் தேவையான திறனை இது நம் உடலுக்கு அளிக்கின்றது.
மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் இந்த பச்சை சாறு: கொத்து கொத்தாய் நன்மைகள்
மஞ்சள் தண்ணீர்: உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது
மஞ்சள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து பருகி வந்தால், உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மஞ்சளில் இருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் பல பிரச்சனைகளை குறைக்கின்றன.
மஞ்சள் தண்ணீர்: கீல்வாதத்திலும் இது நன்மை பயக்கும்
பொதுவாக உடலில் காயங்கள் ஏற்பட்டால், அவற்றை விரைவாக குணப்படுத்த மஞ்சள் தண்ணீர் உதவியாக இருக்கும். காயத்தை ஆற்றுவதில் மஞ்சள் நீர் உங்களுக்கு உதவும். கீல்வாதத்தால் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைப்பதிலும் மஞ்சள் நீர் பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கை நடுக்கம் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம்; நடுக்கம் தீர சில எளிய பயிற்சிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR