பேசும் போதோ அல்லது எந்த வேலை செய்யும் போதோ பெரும்பாலானோரின் கைகள் நடுங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகத் தான் இருந்தது. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் இளைஞர்களிடமும் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன.
எனினும், கைகள் நடுங்குவதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. சில நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் கை நடுக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. வயதானவர்களுக்கு பார்கின்சன் நோய் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். கை நடுக்கம் பிரச்சனையை குறைக்க எந்தெந்த உடற்பயிற்சி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி
ரப்பர் பந்து பயிற்சி
ரப்பர் பந்து பயிற்சியால் கை நடுக்கம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். கைகளின் நடுக்கத்தை கட்டுப்படுத்த இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், பந்தை அழுத்தினால் நரம்புகளும் அழுந்தும். பந்தை முடிந்தவரை இறுக்கமாகப் பிடித்து அதை அழுத்த முயற்சிக்கவும். இந்த பயிற்சி, கை நடுக்க பிரச்சனை குறைய பெரிது உதவும்.
கை டம்பல் உடற்பயிற்சி
கை டம்பல் உடற்பயிற்சியும் (Dumbbell Exercise) உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி கைகளில் உள்ள அதிர்வுகளை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த உடற்பயிற்சி பார்கின்சன் நோயாளிகளாலும் செய்யப்படுகிறது. ஏனெனில் இது நரம்புகளின் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
விரல் தட்டுதல் பயிற்சியும் உதவும்
விரல் தட்டுதல் பயிற்சி (Finger Tap Exercise) உங்களுக்கு உதவும். விரல்களால் ஏதேனும் ஒரு பொருள் அல்லது மேஜை மீது மாற்றி மாற்றி தட்டும் இந்த பயிற்சியில் உங்கள் விரல்கள் மற்றும் கைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஃபிங்கர் டேப் என்னும் விரல்களை தட்டும் பயிற்சி என்பது ஒரு எளியபயிற்சியாகும், இது உங்கள் கைகளின் இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR