இந்திய சமையலில் ஜவ்வரிசி பல விதங்களில், பல வகைகளில் பயன்படும் ஒரு பொருளாகும். இது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொருளாகவும் உள்ளது. இதை பெரும்பாலும் மக்கள் விரத நாட்களில் உட்கொள்வது வழக்கம். சாதாரண நாட்களிலும் இதை மக்கள் பல விதங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவ்வரிசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடலுக்கு சக்தி அளிப்பது முதல் ஹார்மோன்களை சீர் செய்வது வரை பல விஷயங்களில் இது பயனுள்ளதாக இருக்கிறது. இது சூப்பர் உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 


ஜவ்வரிசியை உப்புமா, வடகம், பாயசம், வடை என பல விதங்களில் நாம் சமைப்பது வழக்கம். ஜவ்வரிசி கிச்சடி பல விதங்களில் செய்யபப்டுகிறது. ஜவ்வரிசி கிச்சடி ஒரு மிகச்சிறந்த காலை சிற்றுண்டியாகும். ஜவ்வரிசி கிச்சடி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். 


- காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்வு காரணமாக பசி இல்லாமல் போனால், ஜவ்வரிசி கிச்சடி பசியைத் தூண்ட உதவும். 


- மாதவிடாய் காலத்தில், பல பெண்கள் எண்டோமெட்ரியம் மற்றும் அதிகமான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாயின் நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் ஒரு கிண்ணம் ஜவ்வரிசி உப்புமா அல்லது பாயசம் சாப்பிடுவது பெண்களுக்கு நன்மை பயக்கும். 


- கருவுறுதல் சாத்தியக்கூறுகளை அதிகரிக்க இதை உட்கொள்ளலாம். தங்கள் கரு முட்டைகளை உறைய வைக்கும் எண்ணம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஜவ்வரிசி கூழ் அல்லது உப்புமா சாப்பிடுவது நல்லது.


- ஜவ்வரிசி கிச்சடியை மெனோபாஸுக்கு முந்தைய காலத்திலும் சாப்பிடலாம். தலைவலி, சோர்வு போன்றவை அதிகமாக இருக்கும் அந்த நேரங்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கும். இந்த நேரத்தில் ஒரு கிண்ணம் ஜவ்வரிசி கிச்சடி உட்கொள்வது நல்லது. 


- அண்டவிடுப்பின் (ஓவ்யுலேஷன்) போது இதை சாப்பிடுவதால், உடலு நலனுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில், சில பெண்கள் சொட்டு இரத்த கசிவு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இதற்கு ஜவ்வரிசி நல்ல நிவாரணமாக இருக்கும்.  


மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்த பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க: பல பிரச்சனைகள் வரலாம் 


- மாதவிடாயின் போது பெரும்பாலும் பெண்களுக்கு பசி மிக குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட நேரங்க்களில், மதிய உணவுக்கு ஒரு கப் ஜவ்வரிசி உப்புமா தயிருடன் சாப்பிடுவது நன்மை பயக்கும்.


உங்களுக்கு ஜவ்வரிசி பிடிக்கவில்லை அல்லது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அதை உட்கொள்வதை தவிர்க்கவும். ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமாக இருப்பதால் நம் உடல் ஏற்றுக்கொள்ளும் பொருட்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்க கிட்னில பிரச்சனையா, இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR