கோடையில் வாட்டும் வெப்பத்தைத் தணிக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் பழங்களையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அதிலும் தினமும் வெவ்வேறு பழங்களை சாறு பிழிந்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
விளாம்பழ ஜூஸ் எந்தவொரு மருந்திற்கும் குறைவில்லாதது. இதயம் தொடர்பான பிரச்சனை கொண்டவர்களுக்கும் இந்த சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சக்கரை நோயை கட்டுபடுத்தும் விளாம்பழம், வறட்டு இரும்பல் தடுக்கும், வாந்தி, குமட்டல்,நெஞ்சு எரிச்சலை குறைக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் தலை சுற்றலுக்கு மிகவும் பயனுள்ள மருந்தாகவே விளாம்பழம் பயன்படுகிறது. பித்தத்தைத் தணிக்கும் தன்மையையும் கொண்டது விளாம்பழம்.
மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும்
உடல் சூட்டைக் குறைக்கும் இந்த ஜூஸ், வெப்பத்தைத் தவிர்க்கும் சஞ்சீவி என்றே சொல்லலாம். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும், வில்வத்தின் பழச்சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத் தவிர, இந்த ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்
கோடையில் விளாம்பழ ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உடலை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
புரதம், பீட்டா கரோட்டின், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இந்த ஜூஸில் இருக்கிறது.
இரத்தம் சுத்தமாக இருக்கும்
இரத்தத்தை சுத்தப்படுத்தவும் விளாம்பழ ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்த பல வகையான மருந்துகள் இருந்தாலும், இது ஒரு இயற்கையான வழியாகும்.
விளாம்பழச் சாறு உட்கொள்வது பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் விளாம்பழம், பாலூட்டும் பெண்களுக்கும் வரம் போன்றது.தாய்ப்பால் சுரப்பை விளாம்பழம் அதிகரிக்கிறது.
விளாம்பழ ஜூஸ் எப்போது குடிக்கலாம்?
காலையில் வெறும் வயிற்றில் விளாம்பழ ஜூஸை குடிக்கலாம், வேறு எந்த சமயத்திலும் இந்த ஜூஸை குடிக்கலாம். ஆனால் சாப்பிட்ட உடனேயோ அல்லது டீ மற்றும் காபிக்குப் பிறகும் விளாம்பழ ஜூஸை குடிக்கக்கூடாது.
மேலும் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR