இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம், ஆரோக்கியமான காலை உணவாக பெரும்பாலானோர் ஓட்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகளை சாப்பிடுகிறார்கள். ஓட்ஸ் உணவு தயாரிப்பது எளிதானது என்பதோடு,  ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படும்  உணவுகள் சாப்பிட சுவையானதும் கூட. ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கருதப்படுகிறது. ஓட்ஸில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்ஸ் உடல் பருமனை குறைக்கவும், வயிற்றை ஆரோக்கியமாக (Health Tips) வைத்திருக்கவும் உதவும் சிறந்த உணவு. இருப்பினும், ஓட்ஸ் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் அதை பயிரிடும்போது என்ன இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்து ஓட்ஸின் தரம் மற்றும் நன்மைகள் இருக்கும் என தற்போது ஒரு அமெரிக்க மருத்துவர் எச்சரித்துள்ளார்.


ஓட்ஸ் ஒரு விஷம்


ஓட்ஸ் ஒரு விஷம் என்று வர்ணித்துள்ள அமெரிக்க மருத்துவர் ஸ்டீவன் குண்ட்ரி, ஓட்ஸ் அல்லது ஓட்ஸ் சார்ந்த பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என அமெரிக்கர்களை எச்சரித்துள்ளார். ஓட்ஸில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் என்ற பூச்சிக்கொல்லியைக் குறிப்பிட்ட டாக்டர் ஸ்டீவன், இது உடலுக்கு ஆபத்தான விஷம் போன்றது என்று கூறியுள்ளார். 


நோய்கள் ஏற்படும் அபாயம்


அமெரிக்காவில் உள்ள ஓட்ஸ் பால் போன்ற ஓட்ஸ் பொருட்களில் கிளைபோசேட் கண்டறியப்பட்டுள்ளது. இது நமது குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. இது தவிர, அமெரிக்காவில்  விற்கப்படும் ஓட்ஸில் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாகக் கூறப்படுவது போன்ற பல செய்திகளும் வெளிவந்துள்ளதாக மருத்துவர் கூறுகிறார்.


இந்தியாவில் விற்கப்படும் ஓட்ஸ் நிலை என்ன


இந்நிலையில், இந்தியாவில் கிடைக்கும் ஓட்ஸ் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், அமெரிக்காவில் கிடைக்கும் ஓட்ஸ் போல ஆபத்தானதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், தானியங்கள் மற்றும் ஓட்ஸ் உற்பத்தி செய்யும் ஹங்கிரி கோலா (Hungry Koala) நிறுவனத்தின் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்ரவர்த்தி இது குறித்து கூறுகையில்,  ‘ஓட்ஸ் இறக்குமதி செய்து பயிரிடும் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் கிளைபோசேட் அல்லது வேறு ஏதேனும் களைக்கொல்லியை பயன்படுத்தலாம். அறுவடையை எளிதாக செய்வதற்காக பயிர்களை உலர்த்துவதற்கு கிளைபோசேட் பொதுவாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது’ என்றார்.


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் : இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்தை குறைக்க வழிகள்


இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்


அமெரிக்காவில் இருந்து அதிர்ச்சிகரமான தரவுகள் வெளிவந்த நிலையில், ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்ரவர்த்தி இது குறித்து கூறுகையில், 'இந்திய ஓட்ஸில் கிளைபோசேட் அளவு குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் அமெரிக்காவின் பின்பற்றப்படுவது போலவே, ஓட்ஸ் பயிரிட்டால் ஆபத்து ஏற்படலாம். இருப்பினும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSI), உணவு பொருட்கள் ஆரோக்கியமானதாக இருப்பதை உறுதி செய்ய, ஓட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் பயன்படுத்தக் கூடிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லி அளவுகள் குறித்து அதிகபட்ச வரம்புகளை (MRLs)  நிர்ணயித்துள்ளது. என்றார்


ஓட்ஸ் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


இருப்பினும், ஓட்ஸ் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயத்தில் பயன்படுத்தவில்லை என்று உறுதி அளிக்கும் ஆர்கானிக் சான்றிதழைக் கொண்ட ஓட்ஸ் அல்லது அதன் தயாரிப்புகளை சாப்பிட வேண்டும். பிராண்டுகள்.  கிளைபோசேட் இல்லாத உணவு பொருட்களை மக்களுக்கு வழங்கும் பிராண்டகள் பாதுகாப்பானவை.


உணவில் ஓட்ஸை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்


ஓட்ஸ் ஒரு சத்தான உணவாகும், இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. ஓட்ஸ் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஓட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஓட்ஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்ட விஷயங்களை மனதில் வைத்து உங்கள் உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகிறவரா நீங்கள்... புரதம் அதிகம் உள்ள பழங்களை தெரிந்துகொள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ