உணவுடன் இனிப்பு சாப்பிட்டா என்ன ஆகும்: ஸ்வீட் சாப்பிட பெஸ்ட் டைம் இதுதான்
சுவைகளில் அனைவருக்கும் பிடித்தது இனிப்புச்சுவை. அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்பை சாப்பிடுவது இனிப்பான அனுபவமாக இருக்கும்.
சுவைகளில் அனைவருக்கும் பிடித்தது இனிப்புச்சுவை. அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்பை சாப்பிடுவது இனிப்பான அனுபவமாக இருக்கும்.
ஆனால் இனிப்பை எப்போது சாப்பிடுவது என்ற கேள்விக்கு பலரும் வெவ்வேறுவிதமான பதில்களை சொல்வார்கள். உணவுக்கு முன் அல்லது பின், எப்போது இனிப்புகளை சாப்பிட வேண்டும்? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
முழு உணவு சாப்பிட்ட பிறகு, இனிப்பு அல்லது ஐஸ்க்ரீம் சாப்பிடுவது என்பது நமது விருந்தோம்பலில் ஒரு பகுதி என்பதால், உணவுக்கு பின் இனிப்பு உண்பது நல்லது என்ற எண்ணம் பொதுவாக உண்டு.
உணவுக்குப் பிறகு இனிப்புப் பண்டம் ஏதாவது கிடைத்தால் மக்களின் மனநிலை நன்றாக இருக்கும். இந்திய வீடுகளில், பருவம் மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து, உணவுக்குப் பிறகு அல்லது உணவுடன் வெவ்வேறு வகையான இனிப்பு உணவுகள் பரிமாறப்படுகிறது.
இனிப்புகளை உண்ணும் பாரம்பரியம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. சில இடங்களில், மக்கள் சாப்பிடுவதற்கு முன் இனிப்பை ருசிப்பார்கள், சில இடங்களில் இனிப்பு சாப்பிட்ட பிறகு சாப்பிடுவார்கள்.
ஆயுர்வேத விதிகளின்படி, உணவு சாப்பிடுவதற்கு முன்பு சிறிது இனிப்பு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த எளிய பழக்கங்களின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்!
உணவுடன் இனிப்புகளை சாப்பிடுவது தொடர்பான விதிகள் என்ன?
கேரளா மற்றும் பிற கடலோர மாநிலங்களில் தினசரி உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது வாழைப்பழங்கள். உணவின் நடுவில் பாதி வாழைப்பழத்தை உண்ணும் மரபு உள்ளது, மீதமுள்ள பாதி வாழைப்பழத்தை உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது வழக்கம். இது ஆற்றலை அதிகரிப்பது மற்றும் உணவை சரியாக ஜீரணிக்க உதவுவதாக நம்பப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் கொள்கைகளின்படி, உணவுடன் இனிப்புகளை சாப்பிடுவது உடலின் அமிலம் அல்லது அமிலத்தன்மையின் தீவிரத்தை குறைக்கிறது, இதனால் நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
எனவே, நமது உணவு உண்ணும் முறையில் இனிப்பு உணவுகள் அல்லது இனிப்புகள் எப்படி சேர்க்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அதே சமயம், உணவுக்கு முன் அல்லது பின் இனிப்புகளை உண்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
உணவுக்கு முன்னும் பின்னும் இனிப்புகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உணவுக்கு முன் இனிப்பு சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
ஆயுர்வேதத்தின் படி, உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் இனிப்பு சாப்பிடுவது நாக்கின் சுவை புள்ளிகள் அல்லது சுவை மொட்டுகளை சுறுசுறுப்பாக்குகிறது.
இனிப்பு சுவையுள்ள உணவுகள் அதிக கலோரி உணவுகள் என்று அழைக்கப்படுவதால், அவை ஜீரணிக்க நேரம் எடுக்கும், எனவே முதலில் இனிப்பு சாப்பிடுவது நல்லது.
உணவு உண்பதற்கு முன் இனிப்புகளை உண்பதால் உடலில் உணவை ஜீரணிக்கும் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன.
உணவுக்குப் பிறகு இனிப்புகளை சாப்பிடுவது செரிமான செயல்முறையை பாதிக்கிறது மற்றும் உணவு செரிப்பதை மந்தமாக்கும்.
உணவு சாப்பிட்ட பிறகு இனிப்புகளை சாப்பிடுவதால் வயிறு உப்புசம், வயிற்றில் வாயு உருவாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை உணவு உண்பதற்கு முன்பு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும், செரிமாணத்திற்கும் உகந்தது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR