கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? இதுக்கெல்லாம் கண்டிப்பா ‘நோ’ சொல்லிடுங்க
How To Reduce Bad Cholesterol: உடலில் சேரும் அதிக கெட்ட கொழுப்பை தவிர்க்க, சில உணவு வகைகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொழுப்பைக் குறைப்பது எப்படி: கொழுப்பு அதிகரிப்பது இந்நாட்களில் பலரது பொதுவான பிரச்சனையாகி வருகின்றது. இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால், இதன் காரணமாக, நரம்புகளில் பிளேக் குவியத் தொடங்குகிறது. இது அடைப்புக்கு வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இரத்தம் இதயத்தை அடைய அதிக சக்தியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், மாரடைப்பு, இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் டிரிபிள் வெசல் நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. உடலில் சேரும் அதிக கெட்ட கொழுப்பை தவிர்க்க, சில உணவு வகைகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த உணவுப் பொருட்களால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது
இனிப்புகள்
இனிப்புகள் நம்மை அதிகம் ஈர்க்கின்றன. அவற்றை உண்பதிலிருந்து நம்மால் நம்மை கட்டுப்படுத்திகொள்ள முடிவதில்லை. ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவற்றில் இருக்கும் சர்க்கரை உடைந்து கொழுப்பாக மாறுகிறது. இதன் காரணமாக கெட்ட கொழுப்பின் அளவு நரம்புகளில் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால் கெட்ட கொழுப்பை குறைக்க, சர்க்கரை, இனிப்பு பலகாரங்கள், மிட்டாய்கள், குக்கீகள், கேக்குகள், ஃப்ரூட் ஷேக்குகள், இனிப்புகள் ஆகியவற்றை உங்கள் தினசரி உணவில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும்.
எண்ணெய் பதார்த்தங்கள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போக்கு இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இதன் காரணமாக, நமது இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. மேலும் கலோரிகளின் அளவும் மிகவும் அதிகரிக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்படாவிட்டால், அது உடல் நலனுக்கு ஆபத்தானதாக முடியும்.
மேலும் படிக்க | இந்த பழத்தின் இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நம்மால், இப்போது உணவை தயார் செய்த பின்னர், நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடிகிறது. சில உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போகாதபடி பதப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வகை உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதய நோய்களின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
ரெட் மீட்
ரெட் மீட், அதாவது சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இதை குறைந்த அளவில் உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை விரும்புகிறார்கள். இவற்றை அதிகமாக உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக அதிக கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இந்த வகை இறைச்சியை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதை குறைந்த எண்ணெயில் சமைத்து, குறைந்த அளவில் சாப்பிடுங்கள். இல்லையெனில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா முள்ளங்கியிடம் இருந்து விலகியே இருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ