இந்த 5 உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை அடியோட நீக்கிவிடும்
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகும்.
புதுடெல்லி: நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் 80 சதவீதம் கல்லீரல் மூலமாகவும், மீதி 20 சதவீதம் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தும் கிடைக்கிறது. ஆனால் அதன் அளவு அதிகமாக இருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
இந்த உணவுகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும்
கொலஸ்ட்ரால் என்பது இரத்த நாளங்கள் மற்றும் உயிரணுக்களில் காணப்படும் ஒரு மென்மையான ஒட்டும் பொருளாகும். உடலில் கொலஸ்ட்ரால் இருப்பது சாதாரண விஷயம். இது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும், ஆனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஐந்து உணவுகளை நாம் காண்போம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
1. ஆப்பிள்: ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக, இது எடை குறைக்க உதவுகிறது.
2. பீன்ஸ்: கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
3. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
4. ப்ளாக் மற்றும் க்ரீன் டீ: ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் விடுபடுகிறது.
5. பூண்டு: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் மூலிகைச் சத்துக்கள் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR