COPD என்பது ஒரு தீவிரமான நுரையீரல் நிலையாகும். இந்த பாதிப்பு நுரையீரல் ஆக்ஸிஜன் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு நுரையீரல் ஆக்ஸிஜன் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது.  உலகளவில் சுமார் 400 மில்லியன் மக்களை இந்த நோய் பாதித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுவாச அழற்சியை கவனிக்காமல் அப்படியே விட்டால் காலப்போக்கில் மோசமாக வாய்ப்பு உள்ளது. இது சிகிச்சையளிக்கக் கூடியது. ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இந்நிலையில், சுவாச ஆரோக்கியம் தொடர்பான இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி,  நைட்ரேட்டுகளின் அதிகம் கொண்ட பீட்ரூட் ஜூஸ் மிகவும் பலனளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 12 வாரங்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் (COPD) பாதிக்கப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


"பீட்ரூட் சாறு நைட்ரேட்டின் ஆதாரமாக விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இரத்த அழுத்தத்தில் சில குறுகிய கால விளைவுகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன" என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் நிக்கோலஸ் ஹாப்கின்சன் கூறினார். நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் ஜூஸைக் குடித்த நோயாளிகள், ஆறு நிமிடங்களில் நடக்கக்கூடிய தூரத்தை சராசரியாக சுமார் 30 மீட்டர்கள் அதிகரித்துள்ளனர் என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் ஹாப்கின்சன் இது குறித்து கூறுகையில்: "நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் ஜூஸைக் குடிப்பவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து, இரத்த நாளங்கள் விரிவடைந்தததை ஆய்வின் முடிவில் நாங்கள் கண்டறிந்தோம். சிஓபிடி உள்ளவர்கள் ஆறு நிமிடங்களில் எவ்வளவு தூரம் வரை நடக்க முடியும் முடியும் என்பதையும் இந்த சாறு வியத்தக்க வகையில் மாற்றியது.


மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க... சர்க்கரைவள்ளிக் கிழங்கை ‘இப்படி’ சாப்பிடுங்க!


இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பீட்ரூட் ஜூஸ்


பீட்ரூட் ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைந்தது. பீட்ரூட் ஜூஸ், தினமும் 250 மில்லி லிட்டர் அளவுகளில் உட்கொள்ளப்படும் போது, சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது ஆய்வில் காணப்பட்டது. பீட்ரூட் ஜூஸில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் நைட்ரேட்டுகள் உள்ளன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.


அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பீட்ரூட்


பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன்கள் கொண்ட பொருட்கள் ஆக்ஸிஜனேற்றத்தில் வலுவானவை. அவை அழற்சியைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமன் உள்ளவர்கள் உடல பருமனை குறைக்க இது உதவும்.


புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் பீட்ரூட்


பீட்ரூட் சாற்றில் உள்ள பீட்டாலைன் என்ற உயிர்வேதியியல் கூறு, ஆக்ஸிஜனேற்ற ஆற்றலைக் கொண்டிருக்கலாம். புற்றுநோய் செல்கள் பற்றிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் செல்கள் உள்ளவர்களுக்கு பீட்ரூட் சாறு பலனளிப்பதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.


பீட்ரூட் குறைவான கலோரி திறன் கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த உணவு. எடையைக் குறைப்பதற்கான உணவுத் திட்டத்தின் சேர்க்க வேண்டிய காய்கறி. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக, பீட்ரூட் எடையைக் குறைக்க உதவும். நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட், செரிமானத்தை மேம்படுத்தி மலசிக்கலை போக்குகிறது.  தினசரி பீட்ரூட் உட்கொள்வது உடல் எடை மற்றும் உடல் கொழுப்பை குறைக்கிறது. பீட்ரூட் சாறு கூடுதலாக உடற்பயிற்சி திறனையும் அதிகரிக்கிறது. 


மேலும் படிக்க | குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ