சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கும், மனதுக்கும் இத்தனை நன்மைகளா
Benefits of Cycling: சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு எளிய வகை உடற்பயிற்சி. வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய கூடிய ஒரு உடற்பயிற்சி.
சீரழிந்து வரும் வாழ்க்கை முறையால், இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு மக்கள் அதிகளவில் இரையாகி வருகின்றனர். ஆம், இந்த பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்க விரும்பினால், இதற்கு உடலில் சில வகையான உடற்பயிற்சிகள் அவசியம், இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இந்த பட்டியலில் சைக்கிள் ஓட்டுதல் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். ஆம், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் பொருத்தமாகவும் மாற்றுவது எளிது. காரணம், இது ஒரு வகையான உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது, ஆனால் சைக்கிள் ஓட்டுவதால் என்ன நன்மைகள் இருக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன் பெரிய மற்றும் சிறந்த பலன்களை இன்று நாம் காண உள்ளோம்.
சைக்கிள் ஓட்டுவதால் என்ன நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்- சைக்கிள் ஓட்டும் போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு வகையான உடற்பயிற்சியாக இருக்கும். இதுவரை பல ஆய்வுகளின்படி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஆபத்தை குறைக்கும்.
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
உடல் எடை குறைக்க உதவும்- நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சைக்கிலிங்க் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். உண்மையில், இதுவரை பல ஆய்வுகளின் முடிவில், இது கலோரிகளை கரைப்பதில் உதவும் என்பதைக் காட்டுகின்றன. சுமார் 6 மாதங்கள் சைக்கிள் ஓட்டினால், 12% எடையைக் குறைக்கலாம்.
டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும்- சைக்கிள் தொடர்ந்து ஓட்டினால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம். உண்மையில், ஒரு ஆராய்ச்சியின் படி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டால் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் கணிசமாகக் குறைக்கும்.
தசைகளை வலுப்படுத்த- சைக்கிள் ஓட்டும் போது கால்களின் உதவியுடன் பெடலிங் செய்யப்படுகிறது. இதன் போது கால்கள் மேலிருந்து கீழாக வட்டமாக நகரும். இதன் மூலம், கால்களின் தசைகள் முதல், உடலின் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியின் தசைகள் வலுவடையும்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்- சைக்கிள் ஓட்டுதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். உண்மையில், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்- சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு வகையான ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இதனுடன், பல ஆய்வுகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனநலம் மேம்படும் என்று காட்டுகின்றன. எனவே சைக்கிலிங்க் செய்தால் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR