நீருடன் தேனைக் கலந்து குடித்தால், எண்ணெற்ற நமைகள் மற்றும் பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள் ஆகும். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டும் . 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் (Honey) கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.


* நீங்கள் வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் (Hot Water) தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


ALSO READ | Health News: தேன் ஏன்? தித்திக்கும் தேனால் கிடைக்கும் திகட்டாத வாழ்க்கை!!


* தேனில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதனால் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.


* தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்தால் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.


* தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.


* எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்து தேனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.


ALSO READ | கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் உணவு வகைகள் இதோ: தொற்றும் தொல்லையும் ஓடிப் போகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR