சப்போட்டா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் ஆகும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் இந்தப் பழத்தை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சப்போட்டாவில் அளவில்லா ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆயுர்வேதத்தின் படி, இந்த பழம் பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் சோடியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. எனவே இன்று நாம் சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே நாம் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 


1. சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையில் தீர்வு காணலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.


2. சப்போட்டா சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. ஒருவருக்கு சிறுநீரக கல் இருந்தால், சப்போட்டா சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


3. சளியை நீக்குவதில் சப்போட்டா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் சப்போட்டாவில் காணப்படுகின்றன, இது பல பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கும்.


4. உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், எரிச்சல் மற்றும் கவனமின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து சப்போட்டாவில் காணப்படுகிறது.


சப்போட்டா அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?
சப்போட்டாவை அதிகமாக உட்கொண்டாலோ அல்லது பச்சையாக சிக்கோவை சாப்பிட்டாலோ தொண்டையில் அரிப்பு அல்லது வாயில் புண் ஏற்படலாம். பச்சையான சப்போட்டாவை உட்கொள்வது அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.


சப்போட்டா யார் சாப்பிடக்கூடாது
ஒருவருக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால், சப்போட்டா சாப்பிடும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். ஏனெனில் இதனை உட்கொள்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.


சப்போட்டாவை எவ்வாறு பயன்படுத்துவது?
- சப்போட்டாவை ஹல்வா வடிவில் சாப்பிடலாம்.
- சிலர் சப்போட்டாவை இனிப்பு சாஸ் வடிவில் சாப்பிடுகிறார்கள்.
- சப்போட்டா ஷேக்காக சாப்பிடலாம்.
- சப்போட்டாவை தோலுடன் சாப்பிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ