கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. ஸ்டார்ச் அதிகம் உள்ள இந்தக் கிழங்கு, ஈரம் நிறைந்த வெப்பப் பிரதேசங்களில், அதிகம் விளைகிறது. சேனைக்கிழங்கு, லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு என்பது குறிப்பிடத்தக்கது. உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப்பட்டாலும், ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை சேனைக்கிழங்கு கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி - 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள், கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 என ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல வைட்டமின்களைக் கொண்டது சேனைக் கிழங்கு. 



100 கிராம் சேனைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


கலோரிகள்: 118 கலோரிகள்
நீர்ச்சத்து: 66 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
கொழுப்பு: 1.5 கிராம்
புரதம்: 9.81 கிராம்
நார்ச்சத்து: 5.7 கிராம்
பொட்டாசியம்: 1208 மிகி
கால்சியம்: 20 மிகி
இரும்பு: 1.8 மிகி
மெக்னீசியம்: 82 மிகி
சோடியம்: 14.2 மிகி
துத்தநாகம்: 2 மிகி
தாமிரம்: 0.3 மிகி


இத்தனை சத்துக்களையும் கொண்ட சேனைக்கிழங்கு, பிற காய்கறிகளைவிட ஏன் மகத்துவம் வாய்ந்தது என்றால், நீண்டகாலம் வைத்து பயன்படுத்தக்கூடியது என்பது தான். பிற காய்கறிகள், சில நாட்களில் தனது ஊட்டச்சத்துக்களை இழந்து வாடி விடுகின்றன.  ஆனால், அவை சேனையில் நீண்ட நாட்கள் அப்படியே நீடித்து நிலைக்கின்றன. 


மேலும் படிக்க | ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழிகள்


சேனைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


எடை இழப்பிற்கு உதவுகிறது


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும் சேனைக்கிழங்கில், கலோரிகள் குறைவாக இருப்பதால், சேனைக்கிழங்கு சாப்பிடுவது உங்களுக்கு உடல் எடையை (Weight Loss) குறைக்க உதவும்.


அழற்சி எதிர்ப்பு பண்புகள் 
சேனைக்கிழங்கில், அழற்சி எதிர்ப்பு (Anti-Inflammatory) பண்புகள் உள்ளன. எனவே, இது பல அழற்சி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கல்களைக் குறைக்கும்.


கல்லீரல் செயல்பாட்டை பாதுகாக்கிறது
சேனைக்கிழங்கில் குர்செடின் (Quercetin) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது, கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் இந்த சேர்மம் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன


ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன. எனவே, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.


இளமையை தக்க வைக்கும் சேனைக்கிழங்கு


ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக கொண்ட சேனைக்கிழங்கு, முதுமைத் தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் (Prevents Ageing) உதவுகிறது.


மேலும் படிக்க | 60 வயதுக்காரரும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! இந்த ‘ஸ்பெஷல்’ வழி இருக்கு


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சேனை
சேனைக்கிழங்கு குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாது. மேலும், இதில் மாவுச்சத்து குறைவாகவும் மற்றும் கணிசமான அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதுமட்டுமின்றி, சேனைக்கிழங்கில் நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ன. எனவே, இதனை வாரத்தில் 4 முறை சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.


ஹார்மோன் சமநிலை
சேனைக்கிழங்கானது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உகந்த அளவில் பராமரிக்கிறது. சேனைக்கிழங்கின் இந்த குணம் மாதவிடாய் முன் ஏற்படும் வலிகளை தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதற்கு சேனைக்கிழங்கில் உள்ள வைட்டமின் B6 காரணமாக இருக்கலாம்  


மன அழுத்தம் மற்றும் மலச்சிக்கலுக்கு நிவாரணம்
ஜிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் சேனைக்கிழங்கில் நிறைந்துள்ளன.இவை, மன அழுத்தத்தை தணிக்கவும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன. சேனைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஜூஸ்கள் சூப்பர் டானிக்! சர்வதேச மருத்துவர்களின் பரிந்துரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ