உடல் கொழுப்பு கரைய... குறைந்த கலோரி கொண்ட ‘சூப்பர்’ பானங்கள்!

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். 

சில டிடாக்ஸ் பானங்களை குடிப்பது நன்மை பயக்கும். இது தொப்பை கொழுப்பைக் கரைப்பது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இந்த பானங்கள் நச்சுகளையும் வெளியேற்றுகின்றன. 

 

1 /7

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் கவலைப்பட வேண்டாம், குறைந்த கலோரி மற்றும் மிகவும் ஆரோக்கியமான பல பானங்கள் உள்ளன. இவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /7

கிரீன் டீ  வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் திறன் கொண்டதோடு, கலோரி எரிப்பதை அதிகரிக்கும் கேடசின்கள் எனப்படும் பொருட்கள் இதில் உள்ளது. உங்கள் தினசரி வழக்கத்தில் கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும். இதனால் உடல் உடை குறையும்.

3 /7

எலுமிச்சைப்பழம் அதன் எடை இழப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. குறைந்த கலோரி உள்ளடக்கம், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது போன்ற மற்ற கூடுதல் பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.

4 /7

நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்ட வெள்ளரி பானம் கலோரிகள் மிகவும் குறைவானது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, உடல கொழுப்பை எரிக்க உதவுகிறது.

5 /7

இளநீர் நீரேற்றம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பொட்டாஷியம் நிறைந்த் இளநீர், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

6 /7

எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த பானமாகும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது, செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.