இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி? இதோ முத்தான பத்து வழிகள்
Home Remedies For Blood Purification: நம் உடலை சுத்தம் செய்வது போல், நம் உடலின் உட்புறத்தையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும். இரத்தத்தை இயற்கையான வழிகளில் சுத்தம் செய்யலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Remedies For Blood Purification: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுபாடு, காற்றில் இருக்கும் நச்சுப்பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக இரத்தத்தில் அழுக்கு சேருகிறது. இரத்தத்தில் அழுக்கு சேர்ந்தால், உடலில் உள்ள பல முக்கிய அமைப்புகள் செயல்பட சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். இதனால் உடலில் பலவிதமான நோய்கள் வரத் தொடங்குகின்றன.
இரத்தம்தான் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதன் காரணமாக உறுப்புகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிகின்றது. நாம் தினமும் குளித்து நம் உடலை சுத்தம் செய்வது போல, நம் உடலின் உட்புறத்தையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும். இரத்தத்தை இயற்கையான வழிகளில் சுத்தம் செய்யலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்தத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த 10 வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூலிகை தேநீர்: வெந்தயம், வேம்பு, துளசி, கிரீன் டீ போன்ற மூலிகை தேநீர் குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இவற்றை தினமும் குடித்து வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.
இஞ்சி: இஞ்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள கூறுகள் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | சிசேரியன் காயங்கள் குணமடைய என்ன செய்ய வேண்டும்? இதோ சில டிப்ஸ்..
இளநீர்: இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இது இரத்தத்தில் உள்ள பைட்டோநியூட்ரியன்களின் அளவை அதிகரிக்கிறது. இது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
முழு தானியங்கள்: கோதுமை, அரிசி, தினை, பார்லி போன்ற தானியங்களில் நார்ச்சத்து இருப்பதால் இவற்றை உட்கொள்வது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
மூலிகை சாறு: பாகற்காய், வேம்பு, மாதுளம் போன்ற மூலிகைச் சாறுகள் இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு, எடை இழப்புக்கும் உதவுகிறது.
யோகா மற்றும் பிராணாயாமம்: வழக்கமான யோக ஆசனங்கள், பிராணாயாமம், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி ஆகியவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகின்றன.
பூண்டு: பூண்டில் உள்ள அலிசின் என்ற தனிமம் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம், அல்லது மற்ற உணவுகளில் இதை சேர்த்து உட்கொள்ளலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: மாதுளை, ஆப்பிள், கேரட், கீரை, தக்காளி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் இரத்தத்தை சுத்திகரித்து இரத்தத்திற்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குகின்றன.
தண்ணீர்: தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சம்மரில் சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த டயட் பிளான் ட்ரை பண்ணுங்க: அசந்து போவீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ