பூண்டு சாப்பிடுங்க!! செரிமானம், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா... இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Health Benefits of Garlic: உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2024, 11:02 AM IST
  • பூண்டு அழற்சியால் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • பூண்டு சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கண்களின் ஆரோக்கியத்திற்கும் பூண்டு நல்லது.
பூண்டு சாப்பிடுங்க!! செரிமானம், கொலஸ்ட்ரால், ஆஸ்துமா... இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு title=

Health Benefits of Garlic: நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பூண்டும் ஒன்று. இது உணவிற்கு வித்தியாசமான மற்றும் அனைவருக்கும் பிடித்தமான ருசியை அளிக்கின்றது. உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். 

பல்வெறு விதமான கிரேவிகள், காய்கள், குழம்பு, ரசம், துவையல், சட்டினி, பிரியாணி, என பல வித உணவு வகைகளில் நாம் பூண்டை பயன்படுத்துகிறோம். பூண்டில் அல்லிசின் என்ற கூறு உள்ளது. இது ஒரு வித காரத்தன்மையை அளிகின்றது. இதில் பல வித நோய்களை குணப்படுத்தும் பண்பு உள்ளது. இதன் காரணமாக பூண்டு பல வித உடல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கான வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

பூண்டில் பூஞ்சை, காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தவிர இதில், கார்போஹைட்ரேட், தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், உணவு நார்ச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி, பி6, கால்சியம், செலினியம் ஆகியவையும் நிறைந்துள்ளன. தினமும் ஒரு பல் பூண்டு உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியத்தில் பூண்டின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்:

- பூண்டு அழற்சியால் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் ஒரு பல் பூண்டு உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பலப்படும். இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

- பூண்டு சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தையும் (Heart Health) மேம்படுத்துகிறது. இரத்தக் கட்டிகள் உருவாவதையும் பூண்டு தடுக்கிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

- பூண்டு சாப்பிடுவது செரிமானத்தையும் பலப்படுத்துகிறது. இது செரிமான (Digestion) அமைப்பையும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ள பூண்டு இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளைக் குறைக்கிறது.

- பூண்டை பச்சையாக சாப்பிடுவதால், சிறுநீர் மற்றும் மலம் மூலம் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். பூண்டு கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

- அதிக கொலஸ்ட்ரால் (Cholesterol) உள்ளவர்கள் தினமும் பூண்டை உட்கொள்ளலாம். இது எல்.டி.எல் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

- கண்களின் ஆரோக்கியத்திற்கும் பூண்டு நல்லது. இதில் வைட்டமின் சி, குர்செடின், மாங்கனீஸ் மற்றும் செலினியம் உள்ளது. இது கண்ணில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 

- பூண்டை உட்கொண்டால் பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். புற்றுநோயை (Cancer) எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் இது அதிகரிக்கிறது.

- பூண்டை சாப்பிட்டால் குடல் பிரச்சனைகள் குணமாகும்.

- பூண்டை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மூன்று பூண்டு பற்களை ஒரு  கிளாஸ் பாலுடன் தினமும் இரவில் படுக்கும் முன் பருகி வந்தால் ஆஸ்துமா (Asthma) குணமாகும்.

மேலும் படிக்க | ‘இந்த’ நேரத்தில் டின்னர் சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! எப்போ தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News