Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு குறைய மறுக்கிறதா? அப்படியயென்றால் இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் இதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். பெரும்பாலும், மக்கள் எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என்பதில் குழப்பமடைகிறார்கள். ஆனால், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். 


தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய சில வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுமுறைகளை பற்றி இகே இணலாம்.


போதுமான தூக்கம்


தூக்கத்திற்கு உடல் எடைக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகின்றது. தினமும் இரவில் குறைந்தது 7-8 மணி நேரமாவது கண்டிப்பாக உறங்க வேண்டியது மிக அவசியமாகும். இல்லையென்றால், உடல் பருமன் அதிகமாகும்.


காலை உணவு


நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது. காலையில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். இதனால் நாள் முழுதும் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கின்றது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | வேலை காரணமாக காலை உணவை தவறவிடுகிறீர்களா? இந்த பாதிப்பு ஏற்படலாம்!


சமச்சீர் உணவு


காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். அதிக கொலஸ்ட்ரால், எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உணவில், அதிக காய்கள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை சேர்ப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.


சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிரக்கவும்


உங்கள் உணவில் இருந்து சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை நீக்கவும். இவை எடை இழப்பு முயற்சிகளை பாதிக்கலாம். 


தண்ணீர்


நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். இது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுவதுடன் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. கூடுதல் எடை சேராமல் இருக்க உடல் நீரேற்றத்துடன் இருப்பது மிக அவசியம்.


மூலிகை தேநீர்


பால் கலந்த தேநீருக்கு பதிலாக, இலவங்கப்பட்டை, சீரகம், சோம்பு, ஓமம், இஞ்சி ஆகியவை கொண்டு செய்யப்பட்ட மூலிகை தேநீர்
குடிக்கலாம். இது உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.


உடற்பயிற்சி


உடல் எடையை வேகமாக குறைக்க தினமும், குறைந்தது 30 நிமிடங்களாவது யோகாசனம், உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி என ஏதாவது ஒரு வகை உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது மிக அவசியமாகும். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பல் சொத்தைக்கு முன் தோன்றும் 3 முக்கிய அறிகுறிகள்..! வீட்டு வைத்தியம் இருக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ