Tooth Health Tips Tamil : நாம் உண்ணும் உணவின் சில துகள்கள் பற்களில் சிக்கிக் கொள்ளும். நாட்பட்ட அளவில் அவை பற்களில் படியும்போது, பற்களில் பிளேக் படிகிறது. இதன் காரணமாக பாக்டீரியா உருவாகிறது. அது பற்கள் மற்றும் ஈறுகளின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த பாக்டீரியா அமிலத்தை உருவாக்கி, குழி பிரச்சனையுடன் பல் சிதைவை ஏற்படுத்துகிறது. இது பற்களில் உணர்திறனை ஏற்படுத்துகிறது, அதாவது கூச்ச உணர்வு மற்றும் வலி. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, பல் சிதைவு என்பது உலகில் மிகவும் பொதுவான நோயாகும். அமெரிக்காவில் நான்கில் ஒருவர் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுகிறார். அதனால் பல் பிரச்சனை இருப்பவர்கள் பல் மருத்துவரை சந்தித்து கூடிய சீக்கிரம் ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் இப்படியான பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியிருப்பவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் பல் சிதைவுகளை சரி செய்யலாம். 2020 ஆய்வின்படி, சோடியம் ஃப்ளூரைடு கொண்ட உணவுகள் பற்களில் மீது துவாரங்கள் மற்றும் பல் சிதைவை எதிர்த்துப் போராடுவதில் நன்மை பயக்கும் என கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சோடியம் புளோரைடு பல் பிரச்சனைகளில் இருந்து விடுபட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என ஆய்வு தெரிவித்தது.
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? இதை இரவில் குடித்தால் போதும்
பல் சிதைவின் அறிகுறிகள்
பல் உணர்திறன், பல் வலி, பற்களில் தெரியும் துளை, பற்களில் கருப்பு அல்லது வெள்ளை கறை, ஈறுகளில் இரத்தப்போக்கு
பற்குழி வலியிலிருந்து விடுபடுவது எப்படி?
பற்களில் உள்ள குழி பிரச்சனையை நீக்குவதற்கு கிராம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிராம்புகளில் யூஜெனால் என்ற கலவை உள்ளது. இது இயற்கையான மயக்க பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வலி மற்றும் வீக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் வலியைப் போக்குவதைத் தவிர, கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. கிராம்புகளை பற்களுக்கு இடையில் நேரடியாக அழுத்தலாம். இது தவிர, கிராம்பு எண்ணெயை குழி பகுதியில் தடவினால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கிராம்பு எண்ணெய் ஒரு இயற்கையான வலி நிவாரணி, இது பல் துவாரங்களுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவும்.
உங்கள் பற்களில் புழு இருந்தால் என்ன செய்வது?
பல் தொற்று ஏற்பட்டால், உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நன்மை பயக்கும். உப்பு நீர் ஒரு இயற்கை ஆண்டிசெப்டிக் ஆகும், இது துவாரங்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்லும். ஈறு வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற உப்பு நீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தவும்.
ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத மற்றும் பல் சொத்தை அல்லது குழிவு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற நல்ல சிகிச்சையாக கருதப்படுகிறது. எள் அல்லது தேங்காய் எண்ணெயை 15-20 நிமிடங்கள் வாயில் வைப்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பற்குழி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பை குறைய... கொழுப்பு கரைய.... இந்த தவறுகளை செய்யாதீங்க
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ