நீரிழிவு நோய் பெரும்பாலான மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவு முறையைக் கொண்டிருப்பது அவசியம். இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க, குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை உட்கொள்வதும் மருந்துகளுடன் சேர்த்து, உங்கள் சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய சில இயற்கை பொருட்களை உட்கொள்வதும் மிக அவசியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாய் அமையக்கூடிய ஆயுர்வேத மூலிகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அதன் பொடியை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். இதை தினமும் ஒரு ஸ்பூன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உங்கள் அதிகரித்த சர்க்கரை அளவு குறையத் தொடங்கும். இந்த பொடிகள் உடலில் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மாறாக மற்ற பல நோய்களுக்கும் இவை நன்மை பயக்கும் என்பதுதான் சிறப்பு.


இலவங்கப்பட்டை தூள்


இயற்கையான பயோஆக்டிவ் நிறைந்த இலவங்கப்பட்டை சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது. அதன் பொடியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.


நாவல் பழ விதைகள்


நாவல் பழ விதைகளைக் கழுவி உலர்த்தி விதையின் மேல்பகுதியை நீக்கி உள்விதையை அரைத்து பொடி செய்து கொள்ளவும்.


மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள் 


முருங்கை பொடி


முருங்கை இலைகள், பூக்கள், தண்டுகள் மற்றும் பழங்கள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மூலிகை இது. இதன் இலைகளை அரைத்து பொடி செய்து கொள்ளவும்.


வெந்தய விதை தூள்


வெந்தயத்தை அரைத்து பொடி செய்து கொள்ளவும். வெந்தய விதைகள் இன்சுலின் அதிகரிக்க வேலை செய்கின்றன.


கடுக்காய் தூள்


கடுக்காயை பொடி செய்து கொள்ளவும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்தாகவும் செயல்படுகிறது. இது ஆண்டி-ஆக்சிடெண்டுகளுக்கான வளமான ஆதாரமாக இருப்பதால், இது உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.


நெல்லித்தூள்


வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காயில் குரோமியமும் நிறைந்துள்ளது. இந்த தாது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பை சமன் செய்கிறது. நெல்லிக்காயில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து இன்சுலினை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. நெல்லிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.


இப்படி பொடியை தயார் செய்யவும்


அனைத்து பொடிகளையும் சம அளவில் நன்றாக கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் உட்கொள்ளவும். நீங்கள் விரும்பினால், இந்த ஆறு விஷயங்களையும் தனித்தனியாகவும் பயன்படுத்தலாம்.


குறிப்பு: நீங்கள் வெவ்வேறு பொடிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒரு நாளைக்கு ஒரு வகை பொடியை மட்டும் சாப்பிடுங்கள்.


(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ