Sperm Count: ஆண்களே அலர்ட்! ‘இதை’ சாப்பிட்டா விந்தணுக்களின் தரம் மேம்படும்
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விந்தணு குறையாமல் இருக்க ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் காரணிகள் பல உண்டு. அந்த காரணிகளை எதிர்த்துப் போராட உணவில் சில மாற்றங்களை செய்தால், அது நல்ல விளைவைக் கொடுக்கும். மோசமான உணவு பழக்கங்களால் விந்தணுக்கள் பாதிக்கப்படுவது பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்.
துத்தநாக உணவுகள்
துத்தநாகம் நிறைந்த உணவுகள் விந்தணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது. இது லிபிடோவையும் தூண்ட செய்கிறது. மீன்களில் துத்தநாகம் நிறைந்துள்ளது. விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள ஆண்கள், அடிக்கடி மீன்களை உண்பது பிரச்சனையை தீர்க்கும்.
கோக்கோவில் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளன. கோக்கோ சேர்த்த உணவுகள் என்று பார்த்தால், சாக்லேட், சில வகையான திண்பண்டங்களை சொல்லலாம். அதேபோல எல்-அர்ஜினைன் என்ற நொதி கொண்டதாக இருப்பதால், சாக்லேட் விந்தணுக்களை அதிகரிக்க செய்யும்.
மேலும் படிக்க | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ள உணவுகள் அவசியமானவை. விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவும் விட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ள முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் முட்டை, விந்தணுக்களை மேம்படுத்துகிறது.
தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வைட்டமின்கள் பி 1 மற்றும் வைட்டமின் சி மெக்னீசியம் நிறைந்துள்ள வாழைப்பழம் விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ப்ரோம்லைன் என்னும் அரிய நொதியானது, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.
பாலியல் வாழ்க்கையில் குறைபாடில்லாமல் இருக்க தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது நல்லது. விந்து உற்பத்திக்கு உதவும் வாழைப்பழம் ஆண்களுக்கு அருமருந்து.
மேலும் படிக்க | Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துவதில் பூண்டுக்கு கணிசமான பங்கு உண்டு. இதற்கு காரணம், பூண்டில் அலிசின் என்ற சத்து இருப்பது தான். பூண்டிலுள்ள சத்துக்கள், இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு உதவுகிறது. இரத்த ஓட்டம் பாலியல் உறுப்புகளுக்கு சீராக பாய உதவும் பூண்டு, சேதங்களை தடுக்கும் திறன் கொண்டது.
பூண்டில் உள்ள செலினியம் என்ற நொதி விந்து இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, ஆண்கள், தங்கள் உணவில் பூண்டு அதிகமாக சேர்த்துகொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் கீரைகள், விந்தணுக்களின் வீரியத்தையும் ஊக்குவிக்க செய்கிறது. கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது ஆகும். கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது. இவை, விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்க செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ