நாம் வயதாகும்போது, ​​நமது மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை மூளை செயல்பாட்டையும் பாதிக்கின்றன. முதுமையின் மிகவும் அஞ்சப்படும் விளைவுகளில் ஒன்றாக, அறிவாற்றல் வீழ்ச்சி பொதுவானது. இருப்பினும், அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படாமல் நீங்கள் தடுத்து நிறுத்தலாம். நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் சார்ந்துள்ளது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் பராமரிக்க பின்வரும் எளிய விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் பராமரிக்கவும் உதவும் 8 வாழ்க்கை முறை மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் அறிவாற்றலை அதிகரிக்க உதவும் விஷயங்கள்:


1. உடற்பயிற்சி 


ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது மிதமான உடற்பயிற்சி, இதய ஆரோக்கியத்திற்கு அப்பால் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது.  மூளை விழிப்புணர்வை அதிகரிக்கிறது. கடினமான அதிக உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை. 20 முதல் 30 நிமிடங்கள் மிதமான அல்லது வேகமான ஏரோபிக் உடற்பயிற்சியின் மூலம் நீண்ட கால அறிவாற்றல் மேம்படுத்துவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளன.


2. ஆரோக்கியமான உணவு பழக்கம்


உலர் பழங்கள், விதைகள், சால்மன், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் புதிய தயாரிப்புகள் போன்ற இதய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இதய நோய்க்கான (Heart Health) உங்கள் ஆபத்தை குறைப்பதோடு, இந்த வகையான உணவு ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.


3. மூளையைத் தூண்டும் பயிற்சிகள்


மூளையைத் தூண்டும் பயிற்சிகள் நரம்பு செல்களுக்கு இடையே புதிய இணைப்புகளை உருவாக்குகின்றன. மேலும் மூளை புதிய நியூரான்களை உருவாக்கவும், நரம்பியல் பிணைப்பை வலுப்படுத்தவும் மற்றும் மூளையில் எதிர்கால உயிரணு இழப்பை தடுக்கவும் உதவக்கூடும் என்று மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.


மேலும் படிக்க | அடர்த்தியாக முடிவளர சுலபமான வழிகள்! விதைகள் மூலம் தலைமுடியை வளர்க்கும் வழி


4. இதய ஆரோக்கியம்


நடுத்தர வயதில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வயது தொடர்பான அறிவாற்றல் இழப்பு அதிகமாக இருக்கும். உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்யுங்கள். உடலை பிட் ஆக வைத்திருங்கள், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். தினம் இரண்டு பெக் மதுபானத்திற்கு மேல் உட்கொள்ள வேண்டாம். உங்கள் மன அழுத்தத்தை சமாளித்து, ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்.


5. நல்ல தூக்கம்


நினைவகம் மற்றும் கவனத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று போதிய தூக்கமின்மை. ஆழ்ந்த தூக்கம், நினைவகத்தை ஒருங்கிணைத்து, மூளையில் இருந்து மாறுபட்ட புரதங்களை அகற்றுவதன் மூலம் நினைவகம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பெரியவர்கள் அனுதினமும் சிறந்த அறிவாற்றலுடன் பயனடைவதற்கும் செயல்படுவதற்கும், அவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் ஒன்பது மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.


6. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்


மன அழுத்தம் கவலையை ஏற்படுத்தும் மற்றும் மனநிலை மற்றும் நினைவகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை தினமும் மேற்கொள்வது மனம் நிம்மதியாக உணர உதவும். நாள்பட்ட மற்றும் இடைப்பட்ட மன அழுத்தம், இரண்டும், மூளைக்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்.


7. சமூகத்துடன் இணைந்த நடவடிக்கைகள்


நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு, உணவு மற்றும் உடற்பயிற்சியைப் போலவே ஆரோக்கியமான உறவுகளும் முக்கியமானதாக இருக்கலாம். ஒரு வலுவான சமூக தொடர்புகளை வைத்திருப்பது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை எதிர்பார்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீங்கள் தனியாக வாழ்ந்தால், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொல்ளுங்கள்.


8. புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்


புகையிலையிலிருந்து வரும் நிகோடின் இதயம் மற்றும் இரத்த தமனிகளை சேதப்படுத்துகிறது. இது மூளையை அடையும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைத்து நினைவாற்றலைக் குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிறுத்துவது கடினம் என நினைத்தால், எங்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் உதவியை பெற்றுக் கொள்ளவும்.


மேலும் படிக்க | கொல்ஸ்ட்ரால் முதல் உடல் பருமன் வரை... அளவிற்கு அதிக முட்டை பேராபத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ