அடர்த்தியாக முடிவளர சுலபமான வழிகள்! விதைகள் மூலம் தலைமுடியை வளர்க்கும் வழி

Seeds For Hair Growth: தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? என்ற கேள்வி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் எழுகிறது. இதற்கான எளிய வழிமுறையை தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2023, 10:02 AM IST
  • பெண்களுக்கும் ஆண்களுக்குமான ஆரோக்கிய டிப்ஸ்
  • தலைமுடியை பாதுகாப்பது எப்படி?
  • உணவுகளே தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்
அடர்த்தியாக முடிவளர சுலபமான வழிகள்! விதைகள் மூலம் தலைமுடியை வளர்க்கும் வழி title=

 

அடர்த்தியான, அழகான தலைமுடி என்பது அனைவருக்கும் விருப்பமானது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்காது. தலைமுடி தொடர்பான கவலை என்பது பெண்களுக்கு மட்டுமா? ஆண்களும் தலைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி இருப்பவர்களுக்கும் அவ்வப்போது தலைமுடி தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகின்றன. மன அழுத்தம், மருத்துவ நிலைமைகள், வயது, மாசுபாடுகள் என பிற காரணிகள் தலைமுடியின் தலைவிதியை நிர்ணயிக்கிறது.

சிகை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், மோசமான உணவுமுறை, இரசாயன முடி சிகிச்சைகள் என பல காரணிகள் விலைமதிப்பற்ற அழகை குறைக்கின்றன. ஆனால் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்கவும், நீளமாக வளரச் செய்யவும் சில விதைகளை உங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தினால் போதும்.  

தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?
உங்கள் முடி அமைப்பு இயற்கையாகவே மெல்லியதாக இருந்தாலும் அல்லது ஆரோக்கியமான கூந்தல் திடீரென மெலியத் தொடங்கினாலும், முடிகளின் பளபளப்பு குறைந்தாலும், முடிகள் பிளவுபடுவது, வறண்டு போவது என பிரச்சனைகள் இருந்தாலும், அனைத்திற்கும் தீர்வுகள் இருக்கிறது. 

மேலும் படிக்க | முட்டையை பச்சையாக குடிக்கலாமா? ஆஃப் பாயில் முட்டை ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்குமா?

பொதுவாக முடி உதிர்தல், பொடுகு, தலையில் வழுக்கை விழுவது, முடியின் வேர்கள் வலுவிழப்பது, இளநரை, புருவங்களில் நரைமுடி தோன்றுவது என முடி தொடர்பான கவலைகள் நம்மை பாதிக்கின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாக பெரும்பாலும் முடி சேதமடைகிறது. அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் முடி வளர ஊட்டச்சத்து நிறைந்த விதைகளை தின்சரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எள் மற்றும் எள்ளெண்ணெய்
கருப்பு மற்றும் வெள்ளை எள் விதைகளில் (Sesame seeds) நிறைந்துள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களால் முடிக்கு வலிமையையும் தரும் ஆற்றல் கொண்டவை. நமது உணவில் பயன்படுத்தும் எண்ணெய், எள்ளெண்ணெய் எனப்படும் நல்லெண்ணெயாக இருந்தால் நல்லது. உடல் ஆரோக்கியத்தையும், தலைமுடி ஆரோக்கியத்தையும் எள் பார்த்துக் கொள்ளும்.  

பெருஞ்சீரகம் (Fennel seed)
பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு, முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும், சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும் தன்மையைக் கொண்டது. சோம்பில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், தலைமுடியை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. நோய்த் தொற்றுக்களை தடுக்கும் பண்பும் சோம்புக்கு உண்டு

சூரியகாந்தி விதை (sunflower seeds)
சூரியகாந்தி விதை, சத்தானவை. அவற்றில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் பண்பு மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முடியை ஆரோக்கியமாக வளர உதவுகின்றன. எள்ளெண்ணெயைப் போலவே, சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் சன்ஃப்ளவர் எண்ணெயையும் உணவு சமைக்க பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | முடி உதிர்வுக்கு ஒரேடியாக முட்டுக்கட்டை போடனுமா? அப்போ இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்க

வெந்தயம் (Fenugreek seeds)
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் முடி உதிர்வைக் குறைத்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. முடி ஆரோக்கியத்திற்கு உதவும் புரதம், நியாசின், அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் வெந்தயம் உடல் உஷ்ணத்தை போக்கி, தலைமுடியை செழித்து வளரச் செய்கிறது.

அதிலும் வெந்தயத்தை முளைக்கட்டி உண்டால், அதன் ஆரோக்கிய பண்புகள் பல மடங்காக அதிகரிக்கும், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

பூசணி விதைகள்  (pumpkin seeds)
பூசணி விதைகள் முடி உதிர்வதைக் குறைக்கவும், முடியை பளபளப்பாகவும் உதவுகின்றன. பூசணி விதைகளில் துத்தநாகம், செலினியம், தாமிரம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இவை முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பவதோடு, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக மாற்றுகிறது.

ஆளி விதை (Flaxseeds)
ஆளி விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உடலுக்கு மிகவும் அவசியமானவை. முடியின் வேர்களுக்கு நன்மை அளிக்கும் சத்துக்களை கொண்ட ஆளிவிதை (Flaxseeds for hair growth), முடி உதிர்வதற்கு காரணமான இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உங்கள் தலைமுடியை எத்தனை நாளுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News