தொப்பை கொழுப்பாக இருந்தாலும் சரி, வேறு எந்த இடத்திலிருந்தும் கொழுப்பைக் குறைப்பதாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோருக்கு அது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பதை விட சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை வேகமாக குறைத்து ஒல்லியாக மாறலாம். அந்த வகையில் சுரைக்காய் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும்.  சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுரைக்காய் கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி? 


சுரைக்காய்  ஒரு சத்தான காய்கறி, இது விரைவான எடை இழப்பை ஏற்படுத்தும். சுரைக்காய் (Bottle gourd) என்பது பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி எனக் கூறலாம். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைப்பதில் உதவுவதோடு மட்டுமால்லாமல் அது எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. நெஞ்செரிச்சல், உடலில் நீர்ச்சத்து குறைவு, வெப்பத்தால் ஏற்படும் தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் சுரைக்காய் காப்பாற்றுகிறது.


நார்ச்சத்து  நிறைந்த சுரைக்காய்


எடை இழப்புக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் சத்தான நார்சத்து இதில் அபரிமிதமாக உள்ளது. எடை இழப்புக்கும் உணவில் உள்ள நார்ச்சத்துக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளதை நிபுணர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, எடுத்துக் கொள்ளும் மொத்த கலோரி அளவைக் குறைக்கிறது.


குறைந்த கலோரி உணவு


அதிக கலோரிகளை சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் கொழுப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட வேண்டும். 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது எடையை அதிகரிக்க அனுமதிக்காது.


செரிமானம் அதிகரிக்கிறது


சுரைக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு உருவாவதை நிறுத்துகிறது. இந்த உணவு வயிற்றை லேசாக வைத்து, மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கிறது. அதனால் வயிறு லைட்டாக உணர ஆரம்பிக்கிறது.


வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் சுரைக்காய்


செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றமும் இதனால் அதிகரிக்க தொடங்குகிறது. உங்கள் வளர்சிதை மாற்றம் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ, அவ்வளவு வேகமாக உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.


மேலும் படிக்க |  இதய நோய்களை அண்டாமல் இருக்க செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!


நீரிழிவு கொழுப்பை அகற்றும் சுரைக்காய்


சுரைக்காய் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு, அதாவது அதை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்காது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதோடு, அதனால் ஏற்படும் எடை அதிகரிப்பையும் தடுக்கிறது.


மாரடைப்பு அபாயம் குறையும்


சுரைக்காய் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராகும். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ