உடலில் உள்ள உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான முறையில் இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சிந்தனை ஒழுங்காக இருந்தால்தான் மனித சமூகம் ஒழுங்காக இருக்கும். அதேபோல், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கலந்து மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும்போது ரத்தம் உறைந்து பக்கவாத பாதிப்பு உருவாகிவிடும். அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்து மூளையையும் பாதிக்கும். 


மேலும் படிக்க | Skin Care: தூங்கும் போது இத தடவுங்க, முகம் ரொம்ப அழகா இருக்கும்


மன அழுத்தம் ஏற்படுவதற்கும் அது வழிவகுத்துவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். தமனியின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும். அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகளும் உண்டாகும். 


மேலும் படிக்க | Weight Control Tips: அதிகரிக்கும் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்


நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வழியாகும். அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கெட்டியான போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும்போது சுவாசத்தில் கலக்கும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டு மூளையின் இயக்கம் குறையும். அது பல்வேறு விதமான உடல்நல பிரச்னைகளை உருவாக்கிவிடும். எனவே மேற்கூறிய செயல்களை தவிர்த்து மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


மேலும் படிக்க | Weight Loss: வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் எளிதாக உடல் எடை குறையும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ