கத்தரிக்காய்  முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துவிடும் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்கலாம். கத்தரிக்காய் எல்லா இடங்களிலும் சுலபமாக வளரும் காய் என்பதால், அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். மிகவும் சுலபமாக கிடைக்கும் கத்தரிக்காய், பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. கத்தரிக்காயின் பண்புகள் பொதுவானதாக இருந்தாலும், அதன் நிறத்திற்கு ஏற்றாற்போல, ஆரோக்கிய பண்புகளும் மாறுபடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக அடர் நீலத்தில் இருக்கும் கத்தரிக்காயின் நிறம்,வெள்ளை, பச்சை என பல நிறங்களில் இடம், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மாறுகிறது. கத்தரிக்காயின் நிறம் மட்டுமல்ல, அதன் வடிவமும் இடத்திற்கு இடம் மாறுபடும்.



உணவு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக வளர்க்கப்படும் கத்தரிக்காயில் மறைந்திருக்கும் சத்துக்கள் ஆச்சரியமூட்டுபவை.


ஆன்டி-ஆக்ஸிடன்ட் மட்டுமல்ல, நீள கத்திரிக்காயில் வலி நிவாரண குணமும் இருக்கிறது. அதேபோல, அதிக காய்ச்சலை குறைக்கும் மந்திரமும் இந்தக் கத்தரிக்காயிடம் இருக்கிறது. இது மட்டுமா? வீக்கத்தைக் குறைக்கும் திறன், ஆஸ்துமா எதிர்ப்பு, கொழுப்பைக் குறைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது என இது பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ள பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஏழு சூப்பர் உணவுகள்


அதோடு, நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் uதவும் கத்தரிக்காய், சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது கத்தரிக்காய்


ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கத்தரிக்காய் பல நோய்களை நிர்வகிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 


செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் கத்தரிக்காய்
பச்சை கத்தரிக்காய் சந்தையில் ஏராளமாக கிடைக்கிறது. அதே சமயம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை இருக்காது. எனவே, உங்கள் வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தால், பச்சை கத்தரிக்காயை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.


இதயத்திற்கு ஆரோக்கியமானது
பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனென்றால், உடலில் இருந்து கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம், இதய நோய்களைக் குணப்படுத்தும். எனவே, இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவது நல்லது.


நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
பச்சை கத்தரிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுவதோடு, பருவகால நோய்களிலிருந்தும் விடுபடலாம். அதனால் கத்தரிக்காயை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | 30 வயதிற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!


எடையை குறைக்கும் கத்தரிக்காய் 
பச்சை கத்தரிக்காயை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம். ஏனெனில் இதில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் கத்தரிக்காயை தினமும் உட்கொள்ளலாம்.


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் குறைந்த கரையக்கூடிய கார்போஹைட்ரேட் அளவைக் கொண்டுள்ளது, கத்தரிக்காய் கொழுப்புச் சத்துகளை செரிமானம் செய்வதற்கும், அவை உடலில் உறிஞ்சப்படுவதற்கும் திறம்பட உதவும். இது வகை 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.


டைப் 2 நீரிழிவு நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், குளுக்கோஸ் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு உதவ கத்தரி தினசரி உணவில் ஒரு நல்ல கூடுதலாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 



புற்றுநோய் தடுப்பாக திகழும் கத்தரிக்காய்


நுரையீரல் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக கத்திரிக்காய் நன்மை பயக்கும். கத்தரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும். இது வயிறு அல்லது பெருங்குடல் புற்றுநோய்க்கு உதவக்கூடிய நச்சுக் கழிவுகளை உடலில் இருந்து அகற்றுகிறது.


தோற்றப்பொலிவுக்கு கத்தரிக்காய்
கத்தரிக்காயில்  உள்ளகொழுப்பு, வைட்டமின்கள், ஏராளமான நீர் மற்றும் தாதுக்கள், சருமத்தை மென்மையாகவும், முடி மற்றும் நகங்களை வலுவானதாகவும் மாற்றும். 


நினைவாற்றாலுக்கு கத்தரிக்காய்


கத்தரிக்காயில் அத்தியாவசிய தாவர ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நினைவாற்றலை அதிகரிக்கவும் மூளையின் செல்களைப் பாதுகாக்கவும் உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பழம்! மூளை மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் லிச்சி ஜூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ