தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் கத்தரிக்காய் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அது காயாக மட்டுமல்ல, வார்த்தைப் பிரயோகத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மிகவும் சுலபமாக கிடைக்கும் கத்தரிக்காய், பல்வேறு நிறங்களில் வளர்கிறது. பொதுவாக அடர் நீலத்தில் இருக்கும் கத்தரிக்காயின் நிறம், பல இடங்களில் பர்பிள் எனப்படும் நிறத்திற்கு உதாரணமாக கூறப்படுகிரது. கத்தரிக்காய் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் uதவும் கத்தரிக்காய், சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் பண்பைக் கொண்டது கத்தரிக்காய்.
மேலும் படிக்க | உச்சகட்டத்தில் காற்றுமாசு! நுரையீரலை பாதுக்காக்க இந்த டயட் நல்லது
பிஞ்சுக் கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பண்புகளுக்கும், முற்றிய கத்திரிக்காய்க்கும் உள்ள ஆரோக்கிய குண நலன்கள் மாறுபடும். முற்றிய கத்தரிக்காய், உடலில் அரிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் வராமல் காக்கும் கத்தரிக்காயின் பண்பு, அதன் மிகப் பெரிய மருத்துவ குணமாக பார்க்கப்படுகிறது.
புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் மட்டுமல்ல, வைட்டமின் ‘பி’ சத்தும் கொண்ட கத்தரிக்காய், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
உண்ட உணவு, உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. அதுமட்டுமல்ல, கத்தரிக்காயில் உள்ள மருத்துவ குணமானது, பசி எடுக்காத தன்மையை அகற்றும்.
மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு
கத்தரியில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, மனதை அமைதிப்படுத்தும்.
கத்தரிக்காயில் 92% நீர், 6% கார்போஹைட்ரேட், 1% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது. கத்தரிக்காயில் மாங்கனீசு சத்தும் உள்ளது. பருவம், சாகுபடி சூழல் மற்றும் மரபணு வகை ஆகியவற்றின் அடிப்படையில், கத்தரிக்காயின் ஊட்டச்சத்து கலவையில் மாற்றங்கள் காணப்படுகிறது.
மேலும் படிக்க | புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கார்த்திக்
மேலும் படிக்க | கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ