பால் அலர்ஜியா? பால் குடிக்காமலும் கால்ஷியம் அளவை அதிகரிக்கலாம், இதோ சூப்பர் உணவுகள்
Calcium Rich Foods: பால் கால்சியத்தின் முக்கியமான ஆதாரமாக உள்ளயது. எனினும், பால் எடுத்துக்கொள்ள பிடிக்காதவர்களும், பால் ஒவ்வாமை உள்ளவர்களும் கவலைப்படத் தேவையில்லை.
கால்சியம் அனைவரது உடல் நலனுக்கும் அவசியமான ஒன்றாகும். பெரும்பாலும், உடலிக் கால்சியத்தை சேர்த்துக்கொள்ள நாம் அனைவரும் பாலை மட்டுமே பயன்படுத்துகிறோம். பால் மட்டுமே எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியத்தின் ஒரே ஆதாரம் என் நாம் கருதுகிறோம்.
கால்சியம் குறைபாடு என்பது ஒரு பிரச்சனை. அது அதிகமானால் உடலில் எலும்பு தொடர்பான பல வித நோய்கள் ஏற்படும். ஒரு வகையில் பார்த்தால், முதுமை அதிகரிப்பதாலும், உணவில் தேவையான கால்சியம் இல்லாததாலும், கால்சியம் குறைபாடு பிரச்சனை அதிகமாகிறது.
ஆகையால், உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும். பால் கால்சியத்தின் முக்கியமான ஆதாரமாக உள்ளது. எனினும், பால் எடுத்துக்கொள்ள பிடிக்காதவர்களும், பால் ஒவ்வாமை உள்ளவர்களும் கவலைப்படத் தேவையில்லை.
பால் தவிர, கால்சியம் பிரச்சனையை தீர்க்கக்கூடிய மற்ற விஷயங்களும் பல உள்ளன. கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க, பாலைத் தவிர வேறு என்னென்ன உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
எள்:
வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும் கால்சியம் அதிகம் உள்ளது. தினமும் 2-4 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால், பாலை தவிர்த்தாலும் கால்ஷியம் குறைபாடு ஏற்படாது. 100 கிராம் எள்ளில் 1400 மி.கி கால்சியம் இருப்பதால் எள்ளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுகின்றது.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
சோயா நட்ஸ்:
சோயா நட்சை சிற்றுண்டியாக சாப்பிட்டால், கால்சியம் குறைபாட்டைப் போக்கலாம். 100 கிராம் சோயா நட்ஸில் 240 கிராம் கால்சியம் உள்ளது. இதனுடன் பல்வேறு வகையான கலப்பு நட்ஸ்களையும் சாப்பிடலாம்.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளிலும் கால்சியம் அதிகம் உள்ளது. ராஜ்மா, கொண்டைக்கடலை, உளுந்து ஆகியவற்றில் ஒரு கிளாஸ் பாலில் உள்ள அளவு கால்சியம் உள்ளது. 100 கிராம் பச்சை பயறுகளில் 200 முதல் 250 மிகி கால்சியம் உள்ளது.
கேரட் மற்றும் கீரை:
5-6 கேரட் மற்றும் 50 கிராம் கீரை ஆகியவற்றின் சாறு குடிக்கலாம். இவை இரண்டும் கலந்து சாப்பிட்டால் 300mg கால்சியம் கிடைக்கும். ஒப்பிடுகையில், 200 மில்லி பசுவின் பால் உங்களுக்கு 240எம்.ஜி கால்சியத்தை மட்டுமே கொடுக்கும்.
சோயா பால்:
பால் பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க நீங்கள் சோயா பால் எடுத்துக் கொள்ளலாம். பாலின் பற்றாக்குறையை ஒரு நாளில் இரண்டு கிளாஸ் சோயா பால் மூலம் நிறைவு செய்யலாம்.
மேலும் படிக்க | பொடுகுத்தொல்லையா? முடி உதிரும் பிரச்சனையா? இதை செய்து பாருங்கள்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR