Unknown Pneumonia Warns: கோவிட் -19 (COVID019) ஐ விட அதிக இறப்புக்களை ஏற்படுத்தி வரும் ‘இன்னும் வகைமைப்படுத்தபடாத நிம்மோனியா’ நோயை குறித்து கஜகஸ்தானில் வசிக்கும் சீன குடிமக்களை (Chinese citizens) சீனா எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜகஸ்தானில் (Kazakhstan) உள்ள சீன தூதரகம் தரப்பில் கூறப்பட்ட செய்தியில், ஜூன் மாதத்தில் நிமோனியாவால் 600-க்கும் மேற்பட்டோர் இறந்ததை அடுத்து மத்திய ஆசிய நாடு முழுவதும் வகைமைப்படுத்தபடாத நிம்மோனியா நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த செய்தியும் படிக்கவும் | காற்றின் மூலம் பரவும் கொரோனா... தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?


முன்னாள் சோவியத் பகுதியில் வசிக்கும் அதன் குடிமக்களுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆலோசனையில், சீனத் தூதரகம், புதிய நோய் கோவிட் -19 ஐ விட "மிக அதிகமாக" இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றார்.


கஜகஸ்தானில் "வகைமைப்படுத்தபடாத நிமோனியா" நோயால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,772 இறப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் இறந்துள்ளனர் என சீன தூதரகம் வியாழக்கிழமை தனது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


நோயின் இறப்பு விகிதம் கோவிட் -19 ஐ விட மிக அதிகம் என்று தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


இந்த செய்தியும் படிக்கவும் - கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்


சீன அதிகாரிகளுக்கு நிமோனியா பற்றி கூடுதல் தகவல்கள் இருந்ததா அல்லது அந்த நோயை குறித்து தெரியாமல் இருக்க ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கஜகஸ்தான் ஊடகங்கள் இது நிமோனியா என்று மட்டுமே கூறியுள்ளன.


இதுவரை ‘வகைமைப்படுத்தபடாத நிம்மோனியா’ பற்றி வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (World Health Organization) எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


"கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம், இங்கு வசிக்கும் சீன நாட்டினர் நிலைமையை அறிந்து கொள்ளவும், தொற்று அபாயங்களைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தூதரக அறிக்கை தெரிவித்துள்ளது.


சீன அரசு ஊடகங்களின்படி, கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் புதன்கிழமை அன்று, "நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று கூறினார்.


இந்த செய்தியும் படிக்கவும் - கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வளவு செலவாகும்? எந்த நாட்டிற்கு முதலில் தடுப்பூசி கிடைக்கும்?


கஜகஸ்தானில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு மார்ச் 16 அன்று ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. ஆனால் மே மாதத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனால் அங்கு கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டன.


கஜகஸ்தானின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ் (Kassim-Jomart Tokayev), புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, ​​நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மிக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.