நகங்களின் மீது கருப்பு கோடுகள் உள்ளதா? இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
Cholesterol | கொலஸ்ட்ரால் எனும் சைலண்ட் கில்லர், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது காட்டும் முக்கியமான இந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடாதீர்கள். மிகப்பெரிய ஆபத்து.
Cholesterol Warning Symptoms Tamil | மருத்துவ உலகில் சைலண்ட் கில்லர் என கொலஸ்ட்ரால் அழைக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் முதலில் வெளியே தெரியாத மென்மையான அறிகுறிகளை மட்டுமே காட்டும். அது வெளியே தெரிய ஆரம்பிக்கும்போது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும். அதனால், முன்கூட்டியே சின்ன சின்ன அறிகுறிகளில் இருந்து கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதனால் வரக்கூடிய ஆபத்து உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத சிக்கலில் கொண்டு நிறுத்திவிடும்.
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற கொழுப்பு போன்ற பொருள். இது உயிரணுக்களை உருவாக்குவதற்கும், ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், உணவுகளை செரிப்பதற்கும் இன்றியமையாதது. ஆனால் எல்லா கொலஸ்ட்ராலும் சமமாக உருவாக்கப்படுவதில்லை. அதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்), அதாவது "கெட்ட கொழுப்பு" என்று அறியப்படுகிறது, இதன் அதிக அளவு தமனிகளை அடைத்துவிடும்.
இரண்டாவது வகை உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL): "நல்ல கொழுப்பு". இது உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து LDL ஐ அகற்ற உதவுகிறது. இரத்தத்தில் எல்டிஎல் அதிகமாக இருக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது. இது நமது தமனிகளின் சுவர்களில் ஒட்டிக்கொண்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் அடைப்புகளுக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு ஏன் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது?
கொழுப்பு நிறைந்த உணவுகள் அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் எல்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும். உடற்பயிற்சி இல்லாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உண்மையில் ஆபத்தானது. உடல் உழைப்பின்மை HDL (நல்ல கொழுப்பு) அளவைக் குறைக்கும். உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் நீரிழிவு அல்லது ஹைப்போ தைராய்டிசம் போன்றவையும் கொலஸ்டரால் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்
அதிக கொலஸ்ட்ரால் எதற்கு வழிவகுக்கும்?
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது பல ஆரோக்கிய பிரச்சனைகள் உருவாகும். தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடும். மாரடைப்பு மற்றும் கரோனரி தமனி நோய்க்கு அதிக கொலஸ்ட்ரால் ஒரு முக்கிய காரணமாகும். மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் ஏற்படும். மூட்டு வலி ஏற்படும்.
அதிக கொலஸ்ட்ரால் காட்டும் முக்கிய அறிகுறிகள்
கை கால்களில் அடிக்கடி கூச்ச உணர்வு ஏற்படும். கண் இமைகளைச் சுற்றி சிறிய, மஞ்சள் நிற புடைப்புகள் உருவாகும். மார்பு வலி அல்லது இதய பகுதியில் அசௌகரியம் அடிக்கடி ஏற்படும். நினைவாற்றல் அடிக்கடி இழப்பதை உணர்ந்தால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பை உணர்ந்து கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் நிச்சயம் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கால்கள் அடிக்கடி குளிர்ச்சியடைவது, உணர்விண்மை அல்லது திடீர் வலி ஆகியவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் அறிகுறிகள். தலைவலி, காயம் மெதுவாக குணமாதல், நகங்களில் கீழ் கருமையான கோடுகள் முக்கிய அறிகுறிகளாகும்.
அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது எப்படி?
தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் சாப்பிட வேண்டும். எண்ணெய் உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். இறைச்சி, வறுத்த அல்லது பொறித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். தினமும் 30 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகைப்பிடிப்பது மது அருந்துவது கூடவே கூடாது. சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மோசமான வாழ்க்கை முறையில் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கட்டாயம் மாற வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி சார்ந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ