சோம்பு கஷாயம்: சோம்பு விதைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படுகின்றன. இது தேநீர், ஊறுகாய், இனிப்பு உணவுகள் போன்ற பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சோம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளது மற்றும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதன்படி குளிர்காலத்தில் இதன் கஷாயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே சோம்பு கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று நாம் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோம்பு கஷாயத்தின் நன்மைகள் : -


செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது- சோம்பு கஷாயம் வாயு உருவாக்கம், வயிற்று வலி அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற பல கூறுகள் சோம்பில் காணப்படுகின்றன, இது வயிற்று தசைகளை அமைதிப்படுத்துகிறது.


மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்! 


வாய் துர்நாற்றம்- சோம்பு கஷாயம் வாய் துர்நாற்றத்தை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பின் கஷாயத்தை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடித்து வந்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல் சோம்பை தினமும் மெல்லுவதன் மூலமும் வாய் துர்நாற்றம் நீங்கும்.


சுவாச நோய்களை குணப்படுத்தும்- குளிர்ந்த காலநிலையில் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், சுவாசக் குழாயில் வீக்கம் போன்ற சுவாசக் கோளாறுகள் இருந்தால், சோம்பு கஷாயத்தை உட்கொள்வது உங்களுக்கு நிவாரணம் தரும்.


சருமம்- சோம்பு விதைகளில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. இவை சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. குளிர்காலத்தில் சோம்பின் கஷாயத்தை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை குடித்து வந்தால் சரும பிரச்சனைகள் குணமாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ