Adverse Health Benefits Roadside Corn: சோளம் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், சாலையோரத்தில் விற்கப்படும் சுட்ட சோளக்கருதை உண்பதால், ஆரோக்கியம் கெடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை விடும் இந்த பழக்கம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியுமா? சாலையோரத்தில், நேரடியாக அடுப்பில், சோளக்கருது சுட்டு விற்கப்படுவதை பலரும் வாங்கி சுவைத்திருக்கலாம். அதன் வாசனை நம்மை அதன் பக்கம் ஈர்க்கிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஊட்டச்சத்துக்களின் புதையலாக கருதப்படும் சோளம், உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலையோரம் காணப்படும் சோளத்தை தவறுதலாக கூட உட்கொள்ள வேண்டாம். அதில் மொய்க்கும் ஈக்கள் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சாலையோரம் விற்கப்படும் மக்காச்சோளம் பெரும்பாலும் திறந்த வெளியில் வைக்கப்படுகிறது, இதனால் ஈக்கள் அவற்றின் மீது வந்து அமர்வதை தடுக்க முடியாது. இதனால் சோளத்தில் பல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் வளரும்.


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி


அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற சோளக்கருதை சாலையோரங்களில் விலை மலிவாக இருக்கிறது என்றோ அல்லது நறுமணம் பசியைத் தூண்டுகிறதோ என்று சாப்பிட்டால், உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க முடியாது. கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்பதால், தெருவோரக் கடைகள் மற்றும் அழுக்கு படர்ந்திருக்கும் கடைகளில் சோளக்கருதை வாங்கிச் சாப்பிடக் கூடாது.



மோசமான காற்று மற்றும் மண் துகள்கள்


சாலையோரம் காணப்படும் மக்காச்சோளங்கள், நாள் முழுவதும் திறந்த வெளியில் வைக்கப்படுவதால், அதில் தூசி விழுந்து கொண்டே இருக்கிறது. சோளத்தை உண்ணும் போது இந்த துகள்கள் உங்கள் உடலுக்குள் செல்கின்றன, இதன் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்படலாம். எனவே, சாலையோரத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள சோளத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!


சுற்றியுள்ள அழுக்கு


மக்காச்சோள விற்பனையாளர்கள் சோளத்தை சுட பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை, இது தவிர மக்காச்சோளம் சுட பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் கரித்துகள்கள் விழுந்திருக்கலாம். இதனால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வரக்கூடும். சோளத்தை வெளியில் சாப்பிடும்போது இந்த விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்.


கெட்டுப்போன எலுமிச்சை சாறு மற்றும் சுவையூட்டிகள்


சுட்ட சோளக்கருதுடன் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறு மற்றும் மசாலாப் பொருட்கள் சாலையோர சோளத்தின் சுவையை அதிகரிக்கும். இது தவிர, பல நேரங்களில் சோளத்தை விற்பனை செய்பவர்கள் கெட்டுப்போன அல்லது தூக்கி எறியப்பட்ட எலுமிச்சையைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அப்படி என்றால், சுட்ட சோளம், உங்கள் ஆரோக்கியத்தையும் சுட்டுவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ