Coronavirus Treatment News: எலி லில்லி அண்ட் கோ (Eli Lilly & Co) நிறுவனம் தனது COVID-19 ஆன்டிபாடி மருந்தை நர்சிங் இல்லங்களில் பரிசோதிக்கத் தொடங்கும் என்று செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் இன்று தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாரப்பூர்வமாக BLAZE-2 என அழைக்கப்படும் இந்த சிகிச்சையை எலி லில்லி & கோ மற்றும் கனேடிய ஸ்டார்ட்-அப் அப்செல்லெரா பயோலாஜிக்ஸ் உருவாக்கியது.


ஆன்டிபாடிகள் (Antibody treatments) என்பது உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும். எனவே ஒரு வைரஸை கொல்ல அல்லது கட்டுப்படுத்த ஆன்டிபாடிகள் மிகவும் முக்கியமானது. எனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பதில் ஆன்டிபாடிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 


ALSO READ | உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கா....? கொரோனாவிலிருந்து ஜாக்கிரதை


இது வயதானவர்களுக்கு அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு செலுத்தும் போது தேவையான நோயெதிர்ப்பு சக்தியை பெறுவார்கள். இந்த ஆன்டிபாடி சிகிச்சையானது தொற்றுநோய்களின் இறப்பு (Corona Death) எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவும்.


இந்த ஆய்வில் அமெரிக்காவில் உள்ள நர்சிங் ஹோம்ஸில் சுமார் 2,400 பேர் வரை பங்கேற்பார்கள். அவர்கள் COVID-19 நோயால் தக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்கள் அபாய கட்டத்தில் உள்ளவர்கள் ஆவார்கள்.


ALSO READ | நல்ல செய்தி..! கொரோனாவின் மலிவான மற்றும் பயனுள்ள மருந்து தயார்!