கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இவற்றில் கவனம் செலுத்தினால் விரைவாக குணமடையலாம்
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பலவித பாதுகாப்பையும் மீறி சிலசமயம் நாம் தொற்றுக்கு ஆளாக நேர்கிறது. அப்படி நீங்கள் பாதிப்பட்டிருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பலவித பாதுகாப்பையும் மீறி சிலசமயம் நாம் தொற்றுக்கு ஆளாக நேர்கிறது. அப்படி நீங்கள் பாதிப்பட்டிருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
முதலில் கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால், உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் பிறகு தொற்றுக்கான சோதனை செய்துகொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்டால், ஒரு மருத்துவரை அணுகி, தேவையான ஆலோசனையைப் பெறுங்கள். நீங்களே எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இது தவிர, நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்று (Coronavirus) இருக்கும்போது, உங்கள் உடல் நலனை பாதுகாப்ப, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் முழு ஆரோக்கியத்திலும் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா நோயாளிக்கு தொற்று சரியானவுடனும், 1-2 மாதங்களுக்கு பலவீனம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வெண்டியிருக்கும். தேவையான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை.
1- காலை வெயில் உடலுக்கு நல்லது:
காலை வெயில் உடலில் படுவதால் வைட்டமின் டி மற்றும் நல்ல ஆற்றலைப் பெறலாம். ஆகையால் ஒவ்வொரு நாளும் காலையில் 30 நிமிடங்கள் சூரிய ஒளி உங்கள் உடல் மீது படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. காலை வெயில் உடலுக்கு இதமாக இருக்கும் என்பதால், அதில் அமர்ந்து உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம்.
2- பிராணாயாமம் செய்யுங்கள்:
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், நீங்கள் முதலில் லேசான உடற்பயிற்சிகளிலிருந்து துவங்க வேண்டும். உங்கள் ஆக்ஸிஜன் அளவை சரியாக வைத்திருக்க பிராணாயாமம் (Pranayamam) கண்டிப்பாக செய்ய வேண்டும். அனுலோம்-விலோம், ப்ராமரி, கபால்பாதி, பஸ்திரிகா பிராணாயாமம் ஆகியவற்றால் உடலின் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்.
ALSO READ: சூரிய ஒளி கொரோனா வைரஸைக் கொல்லுமா; மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?
3- உணவில் கவனம் செலுத்துங்கள்:
கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு உடலில் பலவீனம் இருக்கும். நீங்கள் என்ன உட்கொள்கிறீர்கள் என்பதில் அதிக கவனம் தேவை. ஒவ்வொரு நாளும் உலர் திராட்சை, பாதாம் மற்றும் அக்ரூட் ஆகியவற்றை கண்டிப்பாக சாப்பிடுங்கள். நீங்கள் அவற்றை ஊறவைத்து சாப்பிடலாம். மேலும் தொற்றிலிருந்து குணமடைந்தவுடன், எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள்.
4- காலை சூப்:
எலும்புகளை வலிமையாக்க நீங்கள் முருங்கைக்காய் சூப் குடிக்கலாம். இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இதன் காரணமாக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் சோர்வு போன்ற சிக்கல்களும் சரியாகின்றன. இது தவிர பல வித பச்சைக் காய்கறிகளைப் போட்டும் சூப் செய்து குடிக்கலாம்.
5- சீரகம், தனியா மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்த தேநீர்:
கொரோனாவிலிருந்து மீண்டு வரும்போது, சீரகம், தனியா மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றால் ஆன தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு பதற்றத்தையும் நீக்குகிறது. இதன் மூலம், நமது செரிமான அமைப்பும் சீராகிறது. உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க நீங்கள் மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ALSO READ: Worst Food For Immunity: நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் 5 உணவுகள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR