COVAXIN என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா; மனிதர்கள் மீதான சோதனைக்கு ஒப்புதல்
பாரத் பயோடெக் (Bharat Biotech) கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியின் பெயர் கோவாக்சின் (COVAXIN)
Covid-19 Vaccine in India: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் (Covid-19 Outbreak) இந்தியா மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி (Covid-19 vaccine) தயாரிப்பதில் இந்தியா ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பாரத் பயோடெக் (Bharat Biotech) கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியின் பெயர் கோவாக்சின் (COVAXIN) மற்றும் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பிற செய்தி | Corona Vaccine இந்த உலகமே அதிக அளவில் எதிர்பார்க்கும் 4 தடுப்பூசிகள்!!
பிற செய்தி | கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Dexamethasone மருந்துகளை பயன்படுத்த ஒப்புதல்
கோவாக்சின் (COVAXIN) மனித சோதனைகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மனிதர்கள் மீதான கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஜூலை மாதம் தொடங்கப்படும். மனிதர்கள் மீது சோதனை செய்த பிறகு, அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கோவாக்சின் தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி-NIV) உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வைரஸின் திரிபு புனேவின் என்.ஐ.வி.யில் தனிமைப்படுத்தப்பட்டு பாரத் பயோடெக்கிற்கு அனுப்பப்பட்டது, அங்கு இந்த உள்நாட்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
தற்போது, கொரோனா வைரஸின் 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் (Covid-19 vaccine) உலகளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.