வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள்: இந்தியாவில் கோடை காலம் துவங்கிவிட்டது. ஆகையால், உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பருவத்திற்கு ஏற்ப பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் கோடையில் முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம். கோடையில், பெரும்பாலான மக்கள் தங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவை சாப்பிட விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது என்றாலும், ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு பொருளின் மூலம் உடலை நீங்கள் குளிர்விக்க விரும்பினால், வெள்ளரி உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். வெள்ளரிக்காய் இயற்கையான சுவை கொண்டது. இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், இது உள்ளிருந்து உங்களை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.


வெள்ளரியை கோடையில் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வேலையை செய்கிறது. வெக்ளரிக்காய் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை அளிப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியூட்டும் காயாகவும், உடனடி ஆற்றலைக் கொடுப்பதாகவும், சக்தி நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். கோடையில் வெள்ளரியை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


வெள்ளரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


நீர்சத்து அதிகம் 


வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. கொளுத்தும் வெயிலிலும் வெப்பத்திலும் அவை உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் ஊட்டமளிப்பதற்கும் இதுவே காரணம். வெள்ளரிக்காய் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இதில் உள்ள நீர் உடலை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.


புற்றுநோய் தடுப்பு


குகர்பிடாசின் பி என்பது இயற்கையான பொருளாகும். இது வெள்ளரிக்காயில் சிறிய அளவில் காணப்படுகிறது. இது பல்வேறு மனித புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது தவிர, வெள்ளரிக்காய் தோல் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது மற்றும் வயிற்றில் உள்ள நச்சுகளை அகற்றி பெருங்குடல் புற்றுநோயை ஓரளவு தடுக்கிறது.


மேலும் படிக்க | உங்களுக்கு PCOS பிரச்சனை இருக்கா? இந்த உணவுகள் எல்லாம் உங்கள் எதிரி, ஜாக்கிரதை!!


நார்ச்சத்து


வெள்ளரிக்காய் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் பவர் ஹவுஸாக உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் அவை உதவியாக இருக்க இதுவே காரணம்.


சருமத்துக்கு நல்லது


வெள்ளரிக்காய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. இது ஸ்கின் டோனராக செயல்படும். தோல் அழற்சி அல்லது கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களுக்கு வெள்ளரித் துண்டுகளைப் பயன்படுத்தினால், அதனால் பல நன்மைகளை பெறலாம். கோடையில் ஏற்படும் தோல் சிவத்தல், வீக்கம், எரிச்சல் போன்ற பல சரும பிரச்சனைகளை நீக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரியில் சிலிக்கா உள்ளது, இது கூந்தல் மற்றும் நகங்களுக்கு நல்லது.


சரும பாதுகாப்பு


வைட்டமின் சி மற்றும் காஃபிக் அமிலம் வெள்ளரிக்காயில் உள்ளன. இது சரும எரிச்சல் மற்றும் டேனிங்கை நீக்குகிறது மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.


மேலும் படிக்க | Diabetes diet: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதத்தின் அருமருந்து உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ