கோடை காலத்தில் தூசியால் கூந்தலில் அழுக்கு படிந்து பொடுகு வர ஆரம்பித்து, கூந்தலில் அரிப்பு பிரச்சனையை அதிகரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சந்தலை அதிக அளவில் வறண்டு இருப்பது பொடுகுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இது தவிர, பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களும் ஒரு நபருக்கு பொடுகு பிரச்சனையை ஏற்படுத்தும். 


நம் கூந்தலில் உள்ள பொடுகுப்பிரச்சனையை சரி செய்ய ரசாயனம் கலந்த பல வித பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனினும், இயற்கை வழியில் பொடுகுப் பிரச்சனையை தீர்ப்பதே சிறந்த வழியாகும். அப்படிப்பட்ட இயற்கை தீர்வுகளில் ஒன்று இஞ்சி. பொடுகுப் பிரச்சனையை தீர்க்க, பல்வேறு வழிகளில் இஞ்சியை பயன்படுத்தலாம். இதைப் பற்றி விளக்கமாக இந்த பதிவில் காண்போம். 


எண்ணெய்:
உங்கள் உச்சந்தலையில் உள்ள சருமம் சென்சிடிவாக, அதாவது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் இருந்தால், இஞ்சி சாற்றை நேரடியாகப் பயன்படுத்துவதனால் பிரச்சனைகள் வரக்கூடும். அப்படிப்பட்டவர்கள் இஞ்சியை எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். 


இதற்கு என்ன செய்ய வேண்டும்? 
தேங்காய் எண்ணெய் போன்ற, ஏதாவது ஒரு கூந்தலில் தடவும் எண்ணெயை சூடாக்கி, அதில் சில துளிகள் இஞ்சி எசன்ஷியல் ஆயிலைச் சேர்த்து கலக்கவும். பின்னர் அதைக் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது தவிர, இஞ்சியைத் துருவி, கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் ஏதேனும் ஒரு எண்ணெயில் கலந்து, சிறிது நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள். சில நட்களின் இஞ்சியின் சாறு எண்ணெயில் நன்றாக கலந்துவிடும். பின்னர் அதை தொடர்ந்து பயன்படுத்தினால், விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.


மேலும் படிக்க | கோடையில் எந்த நேரத்தில் தயிர் சாப்பிட வேண்டும்? நோய்களை விரட்டும் அற்புத மருந்து 


ரின்ஸ்:
இஞ்சி கொண்டு கூந்தலை நன்றாக அலசலாம். இது உங்கள் தலைமுடிக்கு பளபளப்பை சேர்ப்பது மட்டுமல்லாமல், பொடுகுக்கு சிகிச்சை அளிக்கும். இதற்கு, ஒரு கப் அரிசி நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைட் வினிகர் மற்றும் இஞ்சி சாறு கலக்க வேண்டும். பின்னர் எப்போதும் போல நீர் கொண்டு முடியை கழுவிய பின்னர் இந்த நீர் கொண்டு முடியை அலசவும். 


ஷாம்பு:
உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான முறையில் இஞ்சி-யைப் பயன்படுத்த விரும்பினால், இந்த முறை சிறந்ததாக இருக்கும். இதற்கு சிறிது சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்க்கவும். இப்போது அதைக் கலந்து, இந்த ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை சுத்தம் செய்தால் பொடுகுத் தொல்லை நீங்குவது மட்டுமின்றி, மற்ற அழுக்குகளிலிருந்தும் முடி சுத்தம் செய்யப்பட்டு, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR